For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலியல் சில்மிஷத்துக்கு எதிர்ப்பு.. நண்பரால் ஓடும் காரில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இளம் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அக்காரில் இருந்து தூக்கி வீசிய நபர், காரை தாறுமாறாக ஓட்டி சாலையில் சென்ற தம்பதி மீது மோதினார். இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா போலீசார் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் சனிக்கிழமை அன்று இரவு தன் நண்பர் அமிதாபா போஸை பார்த்துள்ளார். பின்னர் நீண்ட நேரம் ஆனதால் தன்னை வீடடில் இறக்கிவிடுமாறு கூறியிருக்கிறார். அதன்படி இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

Kolkata: 31-year-old Woman Physically Assaulted, Pushed From Moving Car

அப்போது நடுவழியில் பெண்ணை அவரின் நண்பர் பாலியல் ரீதியாக சீண்டி சில்மிஷம் செய்து வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்தி கூச்சல் போட்டிருக்கிறார். இதனால் கோபம் அடைந்த பெண்ணின் நண்பர் அமிதாபா போஸ், அவரை கடுமையாக தாக்கியதுடன். காரில் இருந்து தள்ளிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் பெண்ணை தள்ளிவிட்டு செல்வதை பார்த்த நிலஞ்சனா சாடர்ஜி என்ற பெண்ணும் அவரது கணவரும் காரை தடுக்க முயன்றுள்ளனர். ஆனால் காரை வேகமாக ஓட்டிய அமிதாபா போஸ் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார்,

இந்திய ரயில்வே துறையை அதானி நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்களா? பரவும் வதந்தி.. பின்னணி!இந்திய ரயில்வே துறையை அதானி நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்களா? பரவும் வதந்தி.. பின்னணி!

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 00.10 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள ஆனந்த்பூர் காவல் நிலைய போலீசுக்கு தகவல் கிடைத்தது, விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்த தம்பதியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இச்சம்பவம் குறித்து அமிதாபா போஸ் மீது வழக்கு பதிவு செய்தனர். பாலியல் சீண்டலுக்கு உள்ளான பெண் வீடு திரும்ப அங்கிருந்த பெண் போலீஸார் உதவினர். பாதிக்கப்பட்ட பெண் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

English summary
Kolkata Police registered a case against a man for allegedly physically assaulting a 31-year-old woman and later pushing her from a moving car in the city on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X