For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாரதா நிதி மோசடி.. சிபிஐ சம்மனை கண்டுகொள்ளாத கொல்கத்தா மாஜி போலீஸ் கமிஷனர்.. அடுத்து கைதுதானா?

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பல கோடி மதிப்புள்ள சாரதா சிட் நிதி மோசடி தொடர்பாக நேரில் ஆஜராக சிபிஐ அனுப்பிய சம்மனை கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குமார் புறக்கணித்துள்ளார்.

சாரதா சிட் பண்ட் மோசடி வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐக்கு மாற்றுவதற்கு முன்பு, இந்த ஊழல் குறித்து விசாரிக்க மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவில் (எஸ்ஐடி) அங்கம் வகித்தவர் ராஜீவ் குமார்.

Kolkata ex-police commissioner Rajeev Kumar give a miss to appear before CBI

இவர் ஊழலை மறைக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அவரை கைது செய்ய சிபிஐ முயன்று வருகிறது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்இந்தி திணிப்பை நிறுத்துங்கள்.. தமிழ் வாழ்க.. அனல் பறக்கும் டிவிட்டர்.. தேசிய அளவில் டிரெண்ட் இதுதான்

கொல்கத்தா உயர்நீதிமன்றம் ராஜீவ் குமாரை கைது செய்ய விதித்த தடையை வாபஸ் பெற்றதையடுத்து, ராஜீவ் குமாரை நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. இன்று காலை 10 மணிக்கு சிபிஐ முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே எப்போது வேண்டுமானாலும், ராஜீவ் குமார் கைது செய்யப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Former Kolkata Police Commissioner Rajeev Kumar, who was summoned by the Central Bureau of Investigation (CBI) yesterday in connection with multi-crore Saradha chit fund scam, did not turn up at the agency's office on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X