ஹசின் ஜகான் புகார் எதிரொலி.. முகமது ஷமிக்கு சம்மன் அனுப்பியது கொல்கத்தா போலீஸ்

கொல்கத்தா: ஹசின் ஜகான் கொடுத்த தொடர் புகார்களின் காரணமாக முகமது ஷமிக்கு தற்போது கொல்கத்தா போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது.
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார். இதனால் ஷமி மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
கொலை முயற்சி, கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் ஷமி மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷமி கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வர முடியாது. இதற்காக ஷமியின் மனைவி மேற்கு வங்க முதல்வரின் உதவியை கூட கேட்டு இருந்தார்.

தற்போது ஷமியின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் இவர் விசாரிக்கப்பட உள்ளார். இதற்காக கொல்கத்தா போலீஸ் ஷமிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. நாளை மதியம் இரண்டு மணிக்கு அவரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவர் மனைவி கொடுத்த புகார்கள் குறித்து இதில் விசாரிக்கப்பட உள்ளது. இது இவரது ஐபிஎல் போட்டிகளை பாதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.