For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவி புகாரையடுத்து முகமது ஷமி மீது வழக்கு பதிவு.. ஜாமீன் கிடைப்பது கஷ்டம்

முகமது ஷமி மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

கொல்கத்தா: முகமது ஷமி மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். பெயிலில் வர முடியாத வகையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். முகமது ஷமி தன்னை பலமுறை அவமானப்படுத்தி இருப்பதாக இவர் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

தன்னை கொல்ல முயன்றதாக கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார். மனைவிக்கு மனநலம் சரியில்லை என்றுள்ளார்.

பரபரப்பு

பரபரப்பு

ஷமி பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவரது மனைவி கூறினார். ஷமி செய்த ஆபாசமான சாட்களை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். மேலும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர் புகார் அளித்து இருந்தார்.

புகார் அளித்தார்

புகார் அளித்தார்

ஷமி குறித்து அவரது கொல்கத்தா குற்ற பிரிவு ஜாயிண்ட் கமிஷ்னர் பிரவின் திரிப்பதியிடன் புகார் அளித்தார். கணவன் எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் என்று கடிதமாக எழுதி கொடுத்துள்ளார். அதை வைத்து தற்போது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

பிரிவு

பிரிவு

ஷமியின் மீது தற்போது பிரிவு 307 கொலை முயற்சி) 498 எ (மனைவியை கொடுமைப்படுத்துதல்), 506 (கிரிமினல் குற்றம்), 328 (விஷம் கொடுத்து, தாக்குதல்), 34 (பலருடன் சேர்ந்து கொலை முயற்சி செய்தல்), 376 (வன்புணர்வு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

தம்பி

தம்பி

அவர் மீது மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினர் மீது ஷமி மனைவி புகார் அளித்து இருக்கிறார். ஆனால் எல்லோர் மீதும் வழக்கு பதியப்படவில்லை. ஷமியின் தம்பி மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் ஷமி 10 வருடம் கூட ஜெயிலில் கூட இருக்க நேரிடும் என கூறப்படுகிறது.

English summary
Kolkata Police on Friday (March 9) charged India pacer Mohammed Shami and his brother with IPC sections related to rape, domestic violence and causing hurt with poison following a complaint by Hasin Jahan, the cricketer's wife.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X