For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

நெல்லை கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நெல்லை கூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூடங்குளம் அணு உலை உரிய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு இன்றி செயல்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் அணுஉலையை மூட வேண்டும் என்று வலியுறுத்தியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Koodankulam nuclear power plant can not be closed: Supreme court

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உரிய அணுக்கழிவு சேமிப்பு கிடங்கோ அல்லது கழிவுகளை அகற்றும் வசதியோ இல்லாமல் இயங்கி வருகிறது.

இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வாதிட்டார். அப்போது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் அணுக்கழிவு சேமிப்பு கிடங்கு அமைக்க 4 ஆண்டுகள் கால அவகாசம் வேண்டும் என்றார்.

இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், கூடங்குளம் அணுஉலையை மூட உத்தரவிட முடியாது என தெரிவித்தது.

மேலும் மத்திய அரசுக்கான கால அவகாசத்தை 2022 வரை நீட்டித்து உத்தரவிட்டது. கதிர்வீச்சு சாத்தியமுள்ள அணுக்கழிவு சேமிப்பு கிடங்கை உடனே கட்டுவது ஆபத்து என்பதால் மத்திய அரசுக்கு 4 ஆண்டுகள் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

English summary
Supreme court refused to close Koodankulam nuclear power plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X