For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலாவரம் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் 3 மாநில 'கோயா' பழங்குடிகள்!!

By Mathi
Google Oneindia Tamil News

Koya tribals of Odisha
மல்காங்கிரி: போலாவரம் அணைக்கட்டுத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிப்பதற்கு எதிராக தெலுங்கானா, ஒடிஷா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் கோயா பழங்குடிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஆந்திராவில் மழைக்காலங்களில் கோதாவரி ஆற்றுக்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் அந்த தண்ணீரை சேமிப்பதற்காக போலாவரம் அணைத்திட்டத்தை கம்மம்-கோதாவரி மாவட்டத்தில் நிறைவேற்ற மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

இந்த அணை திட்டத்தின் போது நீரில் மூழ்கி விடும் பகுதிகளான கம்மம் மாவட்டத்தில் உள்ள 7 மண்டலங்கள் சீமாந்திராவில் இணைக்க வகை செய்து மத்திய அரசு தற்போது அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

இதற்கு தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டத்தினால் 3 மாநிலங்களிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான கோயா இன பழங்குடிகள் தங்களது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்படுவர் என்பதால் அந்த இனத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மல்காங்கிரி மாவட்டத்தில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 3 மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கோயா பழங்குடி இனத்தவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிடாவிட்டால் 3 மாநில கோயா பழங்குடிகளும் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் எச்சரித்துள்ளனர்.

English summary
Vehemently protesting the decision of the Centre that has given a green signal to the Polavaram multi-purpose project in Andhra Pradesh, members of the Koya tribal community of Odisha and the neighbouring Chhattisgarh and Telengana have threatened mass agitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X