For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல் முயற்சி தோல்வி.. கடைசி நொடியில் விமானம் யூ டர்ன்.. கோழிக்கோடு விபத்துக்கு முன் என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்து நடப்பதற்கு முன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி, விமானத்தை முதல்முறை தரையிறக்க முயன்று முடியாமல் பின் மீண்டும் தரையிறக்க முயன்றது தெரிய வந்துள்ளது.

துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று விபத்துக்கு உள்ளானது. மாலை 7.30 மணி அளவில் இந்த விமானம் விபத்துக்கு உள்ளது.

இந்த விமானத்தில் 184 பயணிகள் இருந்துள்ளனர். இதில் 2 பைலட்கள் உட்பட 11 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இன்னும் பலர் மோசமான காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார்கள்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்த நிலையில் இந்த விமான விபத்து குறித்த அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், விவரங்கள் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த விமான விபத்து மழை காரணமாகவும், மோசமாக வழுக்கிய ஓடுபாதை காரணமாகவும் ஏற்பட்டுள்ளது. வேகமாக வந்த விமானம் ஓடுபாதையில் இறங்கியவுடன் வழுக்கி இருக்கிறது.

அதிக தண்ணீர்

அதிக தண்ணீர்

ஓடுபாதையில் அதிக அளவு தண்ணீர் இருந்துள்ளது. இதில் விமானம் பட்டவுடன் வழுக்கி வேகமாக சென்றுள்ளது. விமான ஓடுபாதையின் நீளம் 2800 மீட்டர் மட்டுமே இருந்தது. இதனால் விமானத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வேகமாக விமானம் சென்றதால், அதை நிறுத்த முடியவில்லை. வழுக்கிய ஓடுபாதையும் விமானிகளுக்கு ஒத்துழைக்கவில்லை.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இதனால் தான் விமானம் நிற்காமல் 35 அடி பள்ளத்தில் விழுந்து சுவற்றில் மோதி நொறுங்கி உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த விமானம் முதலில் தரையிறங்க முயன்ற போது, தரையிறங்க முடியாமல் சென்றுள்ளது. அதன்பின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் ''go around'' உத்தரவு கொடுத்துள்ளனர். அதாவது மேலே சென்றுவிட்டு, மீண்டும் தரையிறங்குங்கள் என்று கூறியுள்ளனர்.

மேலே சென்று கீழே வந்தது

இதனால் அந்த விமானம் தரையிறங்காமல் மீண்டும் மேலே சென்றுவிட்டு, யு டர்ன் அடித்துள்ளது . இது அப்படியே இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. விமானம் முதலில் கீழே இறங்க வந்துவிட்டு, பின் முடியாமல் மேலே சென்றுள்ளது. அப்படியே சுற்றிவிட்டு, மீண்டும் கீழே வரும்போது வழுக்கி உள்ளது. இந்த வீடியோ மூலம் என்ன நடந்தது என்று தெளிவாக தெரிகிறது. இரண்டாவது முறை வரும் போது விபத்து நேரிட்டுள்ளது. இந்த விமான ஓடுபாதை மிகவும் சிறியது என்பதும் இந்த விபத்துக்கு காரணம் ஆகவும்.

ஏன் கஷ்டம்

ஏன் கஷ்டம்

பொதுவாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் ''go around'' உத்தரவை சில முக்கிய காரணங்களுக்காக கொடுப்பார்கள். சரியான alignment ல் விமான வரவில்லை, வானிலை சரியில்லை, ஓடுபாதையில் வேறு விமானம் இருக்கிறது, லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை என்று நிறைய காரணங்களுக்காக இப்படி ''go around'' உத்தரவை கொடுப்பார்கள். இந்த விமானத்திற்கு ''go around'' உத்தரவை அதேபோல் ஏதாவது ஒரு காரணத்துக்கு (பெரும்பாலும் வானிலை) கொடுத்து இருக்கலாம் என்கிறார்கள் .

English summary
Kozhikode Air India flight accident: Pilot did a second attempt after the failed first one in Kerala .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X