For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மொத்தமாக நசுங்கிய காக்பிட்.. ஒரு பக்கம் தீ பிடித்தது.. கோழிக்கோடு விமான விபத்து.. ஷாக்கிங் காட்சிகள்

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தின் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

கோழிக்கோட்டில் இன்று ஏற்பட்ட விமான விபத்து இந்தியாவை புரட்டி போட்டுள்ளது . ஏற்கனவே மழையால் கேரளாவில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கோழிக்கோட்டில் விமான விபத்து ஏற்பட்டுள்ளது.

துபாயில் இருந்து கோழிக்கோடு நோக்கி வந்த விமானம் கோழிக்கோட்டில் இருக்கும் கரிப்பூர் விமான நிலையத்தில் விபத்துக்கு உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இப்படி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விமானத்தின் பைலட்கள் இருவரும், நான்கு பயணிகளும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

கோழிக்கோடு விமான விபத்து.. பலியான விமானி சாத்தே முன்னாள் விமானப்படை விங் கமாண்டர்! கோழிக்கோடு விமான விபத்து.. பலியான விமானி சாத்தே முன்னாள் விமானப்படை விங் கமாண்டர்!

கீழ விழுந்தது

கீழ விழுந்தது

இந்த விமான விபத்தில் ஏர் இந்தியா விமானம் மொத்தம் 35 அடி கீழே சென்று விழுந்து இருக்கிறது. விமானம் இப்படி கீழே விழுந்த காரணத்தால் அதன் முன் பக்கம் அப்படியே மொத்தமாக நொறுங்கி உள்ளது. விமானிகள் அறையை ஆங்கிலத்தில் காக் பீட் என்று அழைப்பார்கள். இந்த cockpit மொத்தமாக உடைந்து நொறுங்கி உள்ளது. இதில் ஒரு விமானி தீபக் வசந்த் சாத்தே பலியாகி உள்ளார்.

துணை விமானி

துணை விமானி

இவரின் துணை விமானியும் பலியாகி இருக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இவரை குறித்து முழுமையான விவரம் வெளியாகவில்லை. அதேபோல் பலியான விமானி தீபக் வசந்த் முன்னாள் ஏர் போர்ஸ் பயிற்சி விமானி. அதிக அனுபவம் கொண்ட விமானி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர் தரையிறக்கிய விமானமே விபத்துக்கு உள்ளானது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தீ

தீ

இந்த விமானம் உடைந்து நொறுங்கியதும் அதில் ஒரு பக்கம் தீ பிடித்து இருக்கிறது. விமானத்தின் பின் பக்கம் அப்படியே தீ பிடித்து உள்ளது. இதனால் விமானத்தின் உள்ளே இருந்தவர்கள் மோசமாக காயம் அடைந்து இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். விமானம் விபத்துக்கு உள்ளாக மழை ஒரு காரணம். அதே சமயம் இந்த தீ அனைவதற்கும் மழை முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது .

மழை தடுத்தது

ஆம், விமானத்தில் தீ பரவாமல் மழை தடுத்து இருக்கிறது. ஆனால் இன்னும் அந்த விமானத்திற்கு உள்ளே பயணிகள் சிக்கி இருக்கிறார்கள். இதுவரை 40+ பேரை மட்டுமே மீட்டுள்ளனர் . இன்னும் பலர் விமானத்தின் உட்பகுதியில் சிக்கி உள்ளனர். இவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

வீடியோ காட்சிகள்

இந்த விமான விபத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இரண்டாக பிளந்த விமானத்தின் காட்சிகள் இதில் இடம்பெற்று இருக்கிறது.அதேபோல் அங்கு மக்கள் தீயை அணைக்க தொடர்ந்து தண்ணீர் ஊற்றுவதும். மீட்பு பணிகளை செய்வதும் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

English summary
Kozhikode Air India flight accident: Shocking footage from the crash site in Kerala.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X