For Daily Alerts
Just In
கோழிக்கோடு விமான நிலைய மோதல்- 8 அதிகாரிகள் கைது
திருவனந்தபுரம்: கோழிக்கோடு கரிபூர் விமான நிலைய மோதல் தொடர்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த 10-ந் தேதி இரவு விமான நிலைய ஊழியர்களுக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் பலியானார்.
இது தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இச்சம்பவத்துக்குக் காரணமாக இருந்ததாக 8 விமான நிலைய அதிகாரிகள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.