For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோழிக்கோடு.. எரிபொருள் இருந்தும் தரையிறக்கியது ஏன்?.. சந்தேகம் தருகிறது..விமானத்துறை அமைச்சர் கேள்வி

கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்தும் கூட, விமானத்தை அவசரப்பட்டு தரையிறங்கியது ஏன் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

கோழிக்கோடு: கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்தும் கூட, விமானத்தை அவசரப்பட்டு தரையிறங்கியது ஏன் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேள்வி எழுப்பி உள்ளார்.

Recommended Video

    கேரளா விமான விபத்து | விமான போக்குவரத்து இயக்குநரகம் என்ன சொல்கிறது?

    கோழிக்கோட்டில் நடந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்து நாட்டையே உலுக்கி உள்ளது. மழை காரணமாகவும், குறுகிய விமான ஓடுபாதை காரணமாகவும் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    இந்தவிபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். நேற்று துபாயில் இருந்து வந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் வழுக்கி ஓடி , இரண்டாக பிளந்து விபத்திற்கு உள்ளாகி உள்ளது. விமானத்தின் பைலட்கள் இருவரும் இந்த விபத்தில் பலியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி!வேலை இல்லை.. திருமணம்.. எமர்ஜென்சி.. கனவுகளுடன் கோழிக்கோடு திரும்பியவர்கள்.. பலியானவர்களின் பின்னணி!

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    இந்த நிலையில் கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்தும் கூட, விமானத்தை அவசரப்பட்டு தரையிறங்கியது ஏன் என்று மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், கோழிக்கோடு விமான விபத்து குறித்து இன்னும் முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை. இதில் சில சந்தேங்கள் உள்ளது.

    பதில்கள் வரவில்லை

    பதில்கள் வரவில்லை

    இன்னும் பல கேள்விகளுக்கு இதில் பதில் கிடைக்கவில்லை. விசாரணைக்கு பின்பே இதில் பதில் கிடைக்கும். விசாரணை தற்போது நடந்து வருகிறது. அதுவரை எந்த வதந்தியையும் நம்ப கூடாது முழுவதுமாக விசாரணை முடியும் வர காத்து இருக்க வேண்டும். பொய்யான தகவல்களை யாரும் பரப்ப கூடாது .

    கருப்பு பெட்டி

    கருப்பு பெட்டி

    விமானத்தின் கருப்பு பெட்டியை பறிமுதல் செய்து இருக்கிறோம். எனக்கு ஒரே ஒரு கேள்விதான் இருக்கிறது. விபத்துக்கு உள்ளான விமானத்தில் போதிய எரிபொருள் இருந்துள்ளது. விமானத்துறை அதிகாரிகள் உடன் இது தொடர்பாக கேள்வி எழுப்பினேன். அவர்கள் கொடுத்த பதிலின் படி, அந்த விமானத்தில் எரிபொருள் போதுமான அளவு இருந்தது உறுதியாகிறது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனாலும் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானி நினைத்து இருந்தால் வேறு விமான நிலையத்திற்கு சென்று இருக்கலாம் .இதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பாக மீடியாக்கள் நிறைய விஷயங்களை தெரிவித்து வருகிறது. ஆனால் சில விஷயங்கள் நம்பும்படி இல்லை. எரிபொருள் இருந்தும் ஏன் விமானம் அவசரமாக மழையில் தரையிறக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதைத்தான் விரைவில் கண்டுபிடிக்க வேண்டும், என்று அவர் கூறியுள்ளார்.

    English summary
    Kozhikode Air India flight accident: The plane has enough fuel for going to other airport says minister.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X