For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிருஷ்ணா நதியில் கடும் வெள்ளப்பெருக்கு.. வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு

Google Oneindia Tamil News

Recommended Video

    கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு... மூழ்கும் அபாயத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு

    அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வீடு கிருஷ்ணா நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

    மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிருஷ்ணா நதியில் வெள்ளப்பபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஸ்ரீசைலம் மற்றும் நாகர்ஜூனா சாகர் அணைகள் நிரம்பி வழிகிறது.

    krishna river flood: threaten to flood chandrababu naidu house in Andhra pradesh

    இதன் காரணமாக கிருஷ்ணா நதி ஆற்றக்கரைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. விஜயவாடாவில் உள்ள பிரகாசம் பேரேஜ் அணையில் தண்ணீர் அதிக அளவு வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்ஏங்க.. இதைகூட செய்ய மாட்டோமா.. நம்ம பள்ளிவாசல் இருக்கே.. போஸ்ட்மார்ட்டம் செய்ய இடம் தந்த முஸ்லிம்கள்

    அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்துக்குள் புகுந்தது. தரைத்தளத்திற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. முன்னதாக வெள்ள எச்சரிக்கை காரணமாக அவரது வீட்டில் இருந்த கார்கள் அனைத்தும் மங்களகிரிக்கு கொண்டு செல்லப்பட்டது. வீட்டின் கீழ்தளத்தில் இருந்த பொருள்கள் எல்லாம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    இதனிடையே முன்னாள் முதல்வர சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்தினருடன் வெள்ளம் வரும் முன்பே இரவோடு இரவாக ஹைதரபாத்தில் உள்ள தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டால் கரையோரம் உள்ள வீடுகள் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால் அதை ஏற்காமல் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து தங்கியிருந்தார் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ ஆளராமகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணா நதிக்கரையில் சந்திரபாபு நாயுடு குடியிருந்து வரும் இல்லம் வாடகை வீடு என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    krishna river flood, Andhra pradesh e former cm chandrababu naidu house may affected
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X