For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈவ் டீசிங்கிற்கு பெயர் பெற்றவர் கிருஷ்ணர்.. பிரசாந்த் பூஷன் கருத்தால் சர்ச்சை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஆம் ஆத்மி தலைவர் பிரசாந்த் பூஷன், கடவுள், கிருஷ்ணரை பற்றி வெளியிட்ட ஒரு டிவிட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு அமைந்துள்ளது. அவர் தனது தேர்தல் பிரசாரத்தின்போதே, ஈவ் டீசிங் செய்வோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும், அவர்கள் பொது இடத்தில் தூக்கில் தொங்கவிடப்படுவார்கள் என கூறியிருந்தார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பலாத்காரங்கள், நிர்பயா போன்ற சம்பவங்கள் நினைவுக்கு வந்ததால் உ.பி. மக்களுக்கும் இந்த வாக்குறுதி ரொம்பவே பிடித்துப்போய்விட்டது. எதிர்பார்த்தபடியே பாஜக ஆட்சியை பிடித்தது.

ரோமியோ எதிர்ப்பு குழு

ரோமியோ எதிர்ப்பு குழு

முதல்வராக ஆதித்யநாத் பொறுப்பேற்றதும் அவர் சும்மா இருக்கவில்லை. சொன்னபடியே ஒரு குழுவை அமைத்தார். அதன்பெயர் ஆன்டி-ரோமியோ குழுவாகும். இக்குழு, போலீசாரையும் உள்ளடக்கிய ஒன்று. பெண்களை கேலி செய்யும் ஆண்களை துரத்தியடித்தபடி உள்ளது.

ரோமியோ நல்லவர்

இந்த நிலையில், டிவிட்டரில் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரும், மூத்த வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷன், ரோமியோ ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் கிருஷ்ணரோ, வரலாற்று சிறப்புமிக்க ஈஸ்டீசர். எனவே ஆன்டி-கிருஷ்ணா குழு என அழைக்க ஆதித்யநாத்துக்கு தைரியம் உள்ளதா என கேட்டிருந்தார்.

வழக்கு

வழக்கு

இந்த டிவிட்டுக்கு இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. பிற மதங்களை முன்வைத்தும், பிற காரணங்களை முன்னிறுத்தியும், டிவிட்டரில் பிரசாந்த் பூஷனிடம் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர் இந்து மதத்தை சேர்ந்த நெட்டிசன்கள். சிலர் வழக்கு தொடரப்போவதாக அறிவித்தனர்.

தப்பாக

இதையடுத்து தனது டிவிட்டுக்கு விளக்கம் கொடுத்து இன்னொரு டிவிட் வெளியிட்டார் பூஷன். ரோமியோ ஸ்கோட் குறித்த எனது டிவிட் தப்பாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ரோமியோ லாஜிக்கை வைத்து பார்த்தால் கடவுள் கிருஷ்ணரும் ஈஸ் டீசிங் செய்பவர் என்றே டீசர்தான் என்றுதான் கூறினேன் என்றார்.

English summary
AAP leader Prashant Bhushan fell afoul of the Hindutva squad as his tweet commenting about Uttar Pradesh chief minister Adityanath's new 'anti-Romeo squads'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X