For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வசமா மாட்டிக்கிச்சு.. “தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட பேருந்து”- இப்படியா பஸ் ஸ்டாண்ட் கட்டுவீங்க?

Google Oneindia Tamil News

கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து இரண்டு தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்டதால் பேருந்தை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது.

தூண்களுக்கு இடையே நன்றாக மாட்டிக்கொண்டதால் முன்னும் நகர்த்த முடியாமல், பின்னும் நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பேருந்து நிலையத்தை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம் இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்

பேருந்தை வெளியே எடுக்க முடியாததால் அதில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கோழிக்கோடு பேருந்து நிலையம்

கோழிக்கோடு பேருந்து நிலையம்


கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலையத்துக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து வந்த கேரள மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சொகுசு பேருந்து திடீரென பேருந்து நிலையத்தின் இரு தூண்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது. தூண்கள் சொகுசுப் பேருந்துகள் வருவதற்கு உரிய இடைவெளி இன்றி கட்டப்பட்டதே இதற்குக் காரணம்.

வசமாக சிக்கிய பஸ்

வசமாக சிக்கிய பஸ்

பேருந்தை நகர்த்த அதன் ஓட்டுநர் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு அடி கூட பேருந்தை நகர்த்த முடியவில்லை. தூண்களுக்கு இடையே வசமாகச் சிக்கிக் கொண்டதால் அதை யார் முயன்றும் கொஞ்சமும் அசைக்க முடியவில்லை. பெங்களூர் செல்லும் பேருந்தை நகர்த்த முடியாத தகவல் பரவியதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூர் செல்ல வேண்டும்

பெங்களூர் செல்ல வேண்டும்

அந்தப் பேருந்து பெங்களூர் செல்ல வேண்டிய பேருந்து. அதில் பயணிக்க பலர் முன்பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் அது தூண்களுக்கு இடையே சிக்கிக் கொண்டதால் பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பெருசா கட்டுங்க

பெருசா கட்டுங்க

இதையடுத்து கோழிக்கோடு பேருந்து நிலையத்தை பெரிய பேருந்துகளும் வந்து செல்லும்படி சீரமைக்க வேண்டும் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தொழில்நுட்ப ரீதியில் சரியான முறையில் இந்தப் பேருந்து கட்டப்படவில்லை என்றும், பயணிகளுக்கான வசதிகளும் இங்கு சரிவர இல்லை என்றும் அடுக்கடுக்காக குற்றம்சாட்டப்படுகிறது.

English summary
Bus gets stuck between pillars in Kerala : கேரள மாநிலம் கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து இரண்டு தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X