For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கூடங்குளம் 3,4வது அணு உலைகள்: காணொலி காட்சி மூலம் மோடி,புதின் தொடங்கி வைத்தனர்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவா: கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ள 3 மற்றும் 4வது அணு உலைகளுக்கான கட்டுமானப்பணிகளை பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் புதினும் கோவாலில் இருந்து காணொலி காட்சி மூலம் கூட்டாக தொடங்கி வைத்தனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷியா நாட்டு உதவியுடன் அணுமின் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய திறன் வாய்ந்த 6 உலைகள் நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி இங்கு 2 அணு உலைகள் நிறுவப்பட்டு ஏற்கனவே மின் உற்பத்தி தொடங்கி உள்ளது.

இதில் முதல் அணு உலை கடந்த ஆகஸ்டு மாதம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கு 3வது மற்றும் 4வது உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளிடையே ஏற்கனவே இறுதி செய்யப்பட்டது. இந்த 2 உலைகள் அமைப்பதற்கான பூமி பூஜை கடந்த பிப்ரவரி மாதம் 17ம்தேதி நடந்தது. பின்னர் நில அகழ்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.

இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் கட்டுமான பணிக்கான கான்கிரீட் போடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது. இந்த பணிகளை பிரதமர் நரேந்திர மோடியும், ரஷிய அதிபர் புதினும் காணொலி காட்சி மூலம் கோவாவில் இருந்து கூட்டாக தொடங்கி வைத்தனர்.

English summary
Russian President Vladimir Putin and Prime Minister Narendra Modi formally inaugurate the ‘base concreting work' for the two units on today from Goa.After commencing the excavation on February 17 last, digging of earth on the sprawling KKNPP site for the upcoming reactors moved to top gear even as separate state-of-the-art administrative building came-up nearby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X