For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பினார் குல்பூஷன் ஜாதவ்!

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிபர் மற்றும் ராணுவ தளபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு வேலைகள் பார்த்தாகவும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூறி அவருக்கு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்தச் செயலுக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. அவருக்கு தூதரக உதவிகள் தொடர்ந்து மறுக்கப்பட்ட நிலையில், தண்டனையை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மேல்முறையீடு செய்தது.

Kulbhushan Jadhav files mercy petition against death sentence, says Pakistan army

இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் தீர்ப்பு வரும்வரை குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்திவைக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை மறுவிசாரணை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஜாதவ் மேல்முறையீடு செய்திருந்தார். இதை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன், பாகிஸ்தான் அதிபருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். ரத்து செய்யக்கோரி பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு குல்பூஷன் ஜாதவ் கருணை மனு அனுப்பியுள்ளார்.

English summary
Indian national Kulbhushan Jadhav files mercy petition against death sentence, says Pakistan army
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X