For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதல்வர் பதவி இல்லை- குமாரசாமி

காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதல்வர் பதவி இல்லை என்று குமாரசாமி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: காங்கிரஸ் கட்சியுடன் சுழற்சி முறையில் முதல்வர் பதவி இல்லை என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்தார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இவர்களில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பிடிக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ்- மஜத ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தன. 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், கர்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வரக் கூடாது என்பதற்காக முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக் கொடுக்க முன்வந்தது.

இரு கட்சியும்

இரு கட்சியும்

அந்த ஆஃபரை தேவ கௌடாவும் மகன் குமாரசாமியும் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை பிடிக்கவுள்ளன. குமாரசாமி வரும் 23-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். உத்தேச அமைச்சர் பதவி குறித்த பட்டியலும் தயாராகிவிட்டது.

கூட்டணி

கூட்டணி

இந்நிலையில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில் ஆட்சி, அதிகாரத்தை காங்கிரஸும், ஜேடிஎஸ் பகிர்ந்து கொள்வது என்று இறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவும் மஜதவும் கூட்டணி அமைத்தது.

தேர்தல் நடத்த

தேர்தல் நடத்த

அப்போது குமாரசாமி முதல்வராகவும் எடியூரப்பா துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இரு கட்சிகளுக்கிடையேயான ஒப்பந்தத்தை உதறி தள்ளிவிட்டு ஆட்சியை பிடித்த 20 மாதங்களில் தேர்தல் நடத்த வழி வகுத்தார் குமாரசாமி.

செயல்திட்டங்களை வகுக்க முடிவு

செயல்திட்டங்களை வகுக்க முடிவு

தற்போதும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி என்பது குறித்து குமாரசாமியிடம் கேட்டபோது சுழற்சி முறையில் ஆட்சி என்பது கிடையாது என்று அவர் திட்டவட்டமாக கூறினார். இரு கட்சிகளும் கூட்டணி ஒத்துழைப்புக் குழுவை அமைத்து பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டங்களை வகுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

English summary
H.D.Kumarasamy says that his Janata dal (Secular) has no rotational arrangement with the Congress party for Chief Minister post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X