For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன்- குமாரசாமி

கர்நாடகத்தின் முதல்வராக குமாரசாமியும் துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியின் பரமேஸ்வரும் பதவியேற்க உள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகத்தின் முதல்வராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பேன் என குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மே 23-இல் கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு செய்துள்ளார். கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வருக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Kumarasamy is going to take oath on May 25

குமாரசாமியின் அமைச்சரவையில் இடம்பெற கூடியவர்களின் உத்தேச பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. ஜேடிஎஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் உள்பட 9 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Newest First Oldest First
5:27 PM, 20 May

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்காக ஆயிரக்கணக்கானோர் மெரினாவில் கூடினர்
5:27 PM, 20 May

மே 17 இயக்கத்தின் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம்
5:27 PM, 20 May

காவல்துறை தடையை மீறி சென்னை மெரினாவில் நினைவேந்தலை நடத்த திட்டம்
1:19 PM, 20 May

பல மாநிலங்களில் மாற்றுக்கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக மிரட்டியதுபோல் கர்நாடகத்தில் எடுபடவில்லை என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் கர்நாடக ஆளுநர் எடுத்த தவறான முடிவை ஒப்புக் கொண்டு அவர் பதவி விலக வேண்டும் என்றார்.
12:38 PM, 20 May

கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள குமாரசாமி இன்று தமிழகம் வருகை. இன்று மாலை திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்கிறார்
12:11 PM, 20 May

கர்நாடகத்தில் பாஜகவுக்கு 15 நாட்கள் காலஅவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து- ரஜினிகாந்த்
12:11 PM, 20 May

ஆட்சி அமைக்கும் விவகாரத்தில் கர்நாடக ஆளுநர் அது போல் செய்திருக்கக் கூடாது- ரஜினி
12:03 PM, 20 May

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும்
12:03 PM, 20 May

புதிய கர்நாடக அரசு காவிரி தீர்ப்பை மதிக்க வேண்டும்
12:03 PM, 20 May

மக்கள் மன்ற மகளிர் உறுப்பினர்களுடன் ரஜினி சந்திப்பு
11:58 AM, 20 May

கட்சி தொடங்கும் போது கமலுடன் கூட்டணி குறித்து யோசிக்கலாம் - ரஜினிகாந்த்
11:58 AM, 20 May

கட்சியே இன்னும் தொடங்கவில்லை கூட்டணி வைப்பது குறித்து பின்பு பேசலாம் - ரஜினிகாந்த்
11:58 AM, 20 May

கர்நாடக விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சிறப்பாக செயல்பட்டுள்ளது - ரஜினிகாந்த்
11:58 AM, 20 May

உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தலைவணங்குகிறேன் - ரஜினிகாந்த்
11:58 AM, 20 May

சென்னையில் ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
11:58 AM, 20 May

ரஜினி மக்கள் மன்றத்திற்கு பெண்கள் மத்தியில் வரவேற்புள்ளது - ரஜினிகாந்த்
11:58 AM, 20 May

எங்கள் கட்சியில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் - ரஜினிகாந்த்
11:54 AM, 20 May

22-ஆம் தேதி திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெறுகிறது. காவிரி தொடர்பாக விவாதிக்கப்படும் இந்த கூட்டத்துக்கு ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
11:25 AM, 20 May

கர்நாடக முதல்வராக குமாரசாமி வரும் 23-ஆம் தேதி பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவுக்கு வருகை தர வேண்டும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தேவகௌடா அழைப்பு விடுத்துள்ளார்.
11:10 AM, 20 May

பதவியேற்ற 24 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
11:10 AM, 20 May

கர்நாடகா முதல்வராக பதவியேற்கவுள்ள நிலையில் நாளை டெல்லியில் சோனியா, ராகுல் ஆகியோரை குமாரசாமி சந்தித்து பேசுகிறார்.
9:43 AM, 20 May

கர்நாடக தேர்தல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது : டி.டி.வி தினகரன்
9:43 AM, 20 May

ஓபிஎஸ் - ஈபிஎஸ் துரோகக் கும்பலோடு திவாகரன் இணைந்ததே அவரது பேச்சுக்குக் காரணம்
9:43 AM, 20 May

அம்மா ஆட்சியை விரைவில் அமைப்போம் : டி.டி.வி தினகரன் சேலத்தில் பேட்டி
8:26 AM, 20 May

மே 23-இல் ககர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவியேற்க முடிவு
8:26 AM, 20 May

கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வருக்கு துணை முதல்வர் பதவி?

English summary
Kumarasamy is going to take oath on May 23 and Here is the list of possible ministers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X