For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபிட்னஸ் சவால்.. அழைப்பு விடுத்த மோடிக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி பதிலடி

பிரதமர் மோடியின் உடற்பயிற்சி வீடியோ சவாலுக்கு முதல்வர் குமாரசாமி பதில்

Google Oneindia Tamil News

Recommended Video

    விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்ட மோடி-வீடியோ

    பெங்களூர்: பிரதமர் மோடி தன்னுடைய உடற்பயிற்சி முறையை இன்று டிவிட்டரில் வீடியோவாக பதிவிட்டு இதில் பங்கேற்க கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு சவால் விட்டிருந்தார். இதையடுத்து மோடியின் இந்த உடற்பயிற்சி சவாலுக்கு குமாரசாமி பதிலளித்துள்ளார்.

    பிரதமர் மோடி தன்னுடைய உடற்பயிற்சி செய்யும் முறையை வீடியோவாக பதிவு செய்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    Kumarasamy responds to PM modi’s fitness challenge

    அதில், ஒவ்வொரு இந்தியர்களும் ஆரோக்கியத்துடன் இருக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட மோடி, கர்நாடகா முதல்வர் குமாரசாமி தன்னுடைய ஆரோக்கியத்துக்கான உடற்பயிற்சி முறையை வீடியோவாக பதிவிட வேண்டும் என்று அழைப்புவிடுத்து சவால் விட்டிருந்தார்.

    மோடியின் இந்த உடற்பயிற்சி சவாலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

    "நான் அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் என்று நம்புகிறேன். நான் அதற்கு ஆதரவு அளிக்கிறேன். தினமும் என்னுடைய உடற்பயிற்சி கூடத்தில் யோகாவுக்கும் நடைபயிற்சி செய்யும் ட்ரெட்மில்லுக்கும் முக்கிய பங்கு உள்ளது. மேலும், நான் என்னுடைய மாநிலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் அக்கறைகொண்டுள்ளேன். அதற்கு உங்களுடைய உதவியை எதிர்பார்க்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதன் மூலம், மோடியின் சவாலை நேரடியாக ஏற்கவும் இல்லாமல் மறுக்கவும் இல்லாமல், அதே நேரம் மாநிலம் அல்லது நாட்டு ஆரோக்கியம்தான் முக்கியம் என மோடிக்கு மறைமுகமாக அட்வைசும் செய்துள்ளார் குமாரசாமி என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

    English summary
    Karnataka Chief Minister HD Kumaraswamy has responded to Prime Minister Narendra Modi's fitness challenge. Kumaraswamy, tweeting from the official chief minister's account, neither accepted nor rejected the challenge thrown by PM Modi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X