For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமாரசாமி கர்நாடக முதல்வராக நீடிப்பாரா?.. குழப்பமான பதில் அளித்த காங்கிரஸ்

கர்நாடக முதல்வராக குமாரசாமி ஐந்து வருடமும் நீடிக்க ஆதரவு கொடுப்பது சந்தேகம்தான், அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கர்நாடக துணை முதல்வருமான பரமேஸ்வரா...

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று | குமாரசாமி கர்நாடக முதல்வராக நீடிப்பாரா?- வீடியோ

    பெங்களூர்: கர்நாடக முதல்வராக குமாரசாமி அடுத்த ஐந்து வருடமும் நீடிக்க ஆதரவு கொடுப்பது சந்தேகம்தான், அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கர்நாடக துணை முதல்வருமான பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

    கர்நாடக முதல்வராக காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லோரும் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    Kumaraswams Five-Year Term is not final yet says Deputy CM Parameshwara

    இந்த நிலையில் அவர் அடுத்த ஐந்து வருடத்திற்கும் முதல்வராக இருப்பது சந்தேகம்தான். பதவிக்காலம் முடியும் வரை அவருக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யவில்லை என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் கர்நாடக துணை முதல்வருமான பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.

    பரமேஸ்வரா துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டது காங்கிரஸ் கட்சியிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சியில் சில முக்கியமான நபர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை. இதனால் சில எம்எல்ஏக்கள் அதிருப்தியில் இருக்கிறார்.

    அதேபோல் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நபரான, டிகே சிவக்குமார் துணை முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருக்கிறார். அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் சில எம்எல்ஏக்களுடன் தனியாக கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மஜத காங்கிரஸ் கூட்டணியில் மறைமுகமான ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.

    அதற்கு வலு சேர்க்கும் வகையில் காங்கிரசின் கட்சியின் பரமேஸ்வரா, குமாரசாமி ஐந்து வருடம் முதல்வராக இருப்பது சந்தேகம்தான். ஐந்து வருடமும் ஆதரவு அளிக்க இன்னும் முடிவு செய்யவில்லை. அவர் ஆட்சியை பொறுத்துதான் இதில் முடிவெடுக்க முடியும். அதுவரை கொஞ்சம் பொறுத்திருப்போம், என்று வித்தியாசமாக பதில் அளித்துள்ளார். இதில் கர்நாடகாவில் ஓய்ந்திருந்த அரசியல் புயலை மீண்டும் கிளப்பியுள்ளது.

    English summary
    Kumaraswam's Five-Year Term is not final yet says Deputy CM Parameshwara ahead of crucial floor test at the Karnataka Legislative Assembly today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X