For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடக முதல்வரானார் குமாரசாமி.. மம்தா, ராகுல் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் பங்கேற்பு!

கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு மூலம் அம்மாநில முதல்வராக பதவியேற்று இருக்கும் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள்

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகா முதல்வராக பதவியேற்றார் குமாரசாமி-வீடியோ

    பெங்களூர்: கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கூட்டணியின் ஆதரவு மூலம் அம்மாநில முதல்வராக பதவியேற்று இருக்கும் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

    கர்நாடகாவில் 104 இடங்களில் வெற்றி பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி தற்போது ஆட்சி அமைத்து உள்ளது.

    Kumaraswamy takes oath as Karnataka CM, Opposition leaders, including Mamata, Rahul participates

    இரண்டு நாட்களுக்கு முன்பு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. அதன்படி இன்று முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் இரண்டாவது முறையாக முதல்வராகிறார்.

    விவசாயிகள் பெயரில் முதல்வராக பதவியேற்றார். கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடகாவின் 24வது முதல்வராக மஜதவின் குமாரசாமி பதவியேற்றார்.

    கர்நாடக துணை முதல்வராக காங்கிரசின் பரமேஸ்வரா பதவியேற்றார். இவர்கள் இருவரின் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் முக்கிய தலைவர்கள, கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பாஜக கட்சியை தவிர, பல மாநில தலைவர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு, கேரளா முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர் பங்கேற்றனர்.

    அதேபோல் குமாரசாமியின் தந்தையும், மஜத கட்சியின் தேசிய தலைவருமான தேவ கவுடா, காங்கிரஸின் மல்லிகார்ஜுனா கார்கே, சரத் பவார், சரத்யாதவ், டி.ராஜா, லாலுவின் மகன் தேஜஸ்வினி, சீதாராம் யெச்சுரி ஆகியோரும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.

    தெலுங்கான முதல்வர் சந்திரசேகர ராவ் கடைசி நேரத்தில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ஸ்டாலின் தூத்துக்குடி கோர சம்பவம் காரணமாக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. கமல்ஹாசன் பதிவேற்பு விழாவில் கடைசி நேரத்தில் கலந்து கொண்டார்.

    English summary
    Bengaluru: Oath-taking ceremony of JD(S) leader HD Kumaraswamy as Karnataka CM.Opposition leaders, including Congress' Sonia Gandhi & Rahul Gandhi, SP's Akhilesh Yadav, AP CM Chandrababu Naidu, WB CM Mamata Banerjee, RJD's Tejashwi Yadav, CPI(M)'s Sitaram Yechury, NCP's Sharad Pawar, & newly sworn in Karnataka CM HD Kumaraswamy at Vidhana Soudha.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X