For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“கிரில் சிக்கன் சாப்டாதீங்க”.. கோஹ்லிக்கு அட்வைஸ் பண்ணும் க்ரிஷி விக்யான் கேந்த்ரா!

கிரில் சிக்கன் சாப்பிட வேண்டாம் என கிரிக்கெட் வீரர் கோஹ்லிக்கு, க்ரிஷி விக்யான் கேந்த்ரா அறிவுரை கூறியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    “கிரில் சிக்கன் சாப்டாதீங்க”.. கோஹ்லிக்கு ஒரு அட்வைஸ்

    போபால்: கிரில் சிக்கனுக்குப் பதிலாக கேதக்நாத் சிக்கனை சாப்பிடும்படி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோஹ்லிக்கு கோரிக்கை விடுத்துள்ளது மத்திய பிரதேசத்தில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்த்ரா.

    கடந்தாண்டு 'ப்ரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்'' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான கோஹ்லி. அப்போது கிரில் சிக்கனை உணவாக எடுத்துக் கொள்வதாக அவர் கூறியிருந்தார்.

    kvk writes to virat kohli recommending kadaknath chicken over grilled chicken

    இந்நிலையில் இது தொடர்பாக மத்திய பிரதேசம் ஜாபாவில் உள்ள க்ரிஷி விக்யான் கேந்த்ரா, கோஹ்லிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

    அதில் "கிரில் சிக்கனை உணவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக கேதக்நாத் சிக்கனை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அதில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு குறைவாகவும், புரோட்டின் மற்றும் இரும்புச்சத்து அதிகமாகவும் உள்ளது.இது உங்கள் விளையாட்டு திறனிற்கு பெரிதும் உதவும்" என்று குறிப்பிட்டுள்ளது.

    மேலும், கேதக்நாத் சிக்கன் தேசிய ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்யப்பட்டு மிகவும் சிற‌ந்த உணவு என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது எனவும் அந்தக் கடிதத்தில் க்ரிஷி விக்யான் கேந்த்ரா தெரிவித்துள்ளது.

    அதோடு, இந்திய அணிக்கு தேவைப்பட்டால் கேதக்நாத் சிக்கனை வழங்க தயாராக இருப்பதாகவும் அது உறுதியளித்துள்ளது.

    English summary
    Krishi Vigyan Kendra in Jhabua, Madhya Pradesh has sent a letter to the Board of Control for Cricket in India (BCCI) and the Indian cricket team captain Virat Kohli to stop eating grilled chicken and switch to ‘Kadaknath’ chicken.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X