For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லடாக்கில் பெரும் பனிச்சரிவு.. சிக்கிய 10 பேர்.. ஒருவர் பலி.. மீட்பு பணி தீவிரம்!

லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    லடாக் பனிச்சரிவில் 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர்-வீடியோ

    ஸ்ரீநகர்: லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் சிக்கிக்கொண்டுள்ளனர். இதில் ஒருவர் பலியாகியுள்ளார்.

    கடந்த செவ்வாய்க்கிழமை தேசிய பேரிடர் மேலாண்மையும், மாநில பேரிடர் மேலாண்மையும் முக்கியமான எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, காஷ்மீரில் உள்ள 9 இடங்களில் மலை ஏற்றம் செல்லக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து இருந்தது.

     Ladakh avalanche hit: 10 trapped, 1 feared to death, Rescue operation on

    பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. குல்ஹாம், ஆனந்த்நாக், புத்காம், பாராமுல்லா,குப்வாரா, லடாக், கார்கில் மற்றும் லே ஆகிய பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் இன்று லடாக்கில் அதேபோல் பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. லடாக்கில் கார்த்துங் லா பகுதியில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.

    லடாக்கில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு மலை ஏற்றம் செய்து கொண்டு இருந்த 10 பேர் புதைந்தனர். இவர்கள் 10 பேரும் சுற்றுலா பயணிகள் என்று கூறப்படுகிறது.

    பனிச்சரிவில் சிக்கிய 10 பேரில் ஒருவர் பலியாகிவிட்டார் என்று கூறுகிறார்கள். மீதமுள்ள 9 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு தற்போது மாநில பேரிடர் மீட்பு படை தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

    English summary
    Ladakh avalanche hit: 10 trapped, 1 feared to death, Rescue operation on by State rescue force.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X