For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்களுக்கு இடமில்லை.. பல லட்சம் பேர் வெளியேற்றப்படும் அபாயம்.. அசாமில் என்ன நடக்கிறது தெரியுமா?

அசாமில் உள்ள பல லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Assam NRC final list 2019

    திஸ்பூர்: அசாமில் உள்ள பல லட்சம் மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். தங்களின் வாழ்க்கை அடுத்து எங்கே செல்லும் என்று தெரியாமல் பல லட்சம் பேர் கடும் குழப்பத்தில் உள்ளனர்.

    1968ல் வங்கதேசம் உருவாகும் முன் அங்கு இருந்த கிழக்கு பாகிஸ்தானில் திடீர் மதக்கலவரம் ஏற்பட்டது. இதனால் அப்போது அங்கிருந்து சாரைசாரையாக இந்துக்கள் இந்தியாவில் குடியேறினார்கள்.

    இந்தியாவிற்கு வந்த அவர்கள் அகதிகளாக தங்களை பதிவு செய்து கொண்டனர். இந்த இந்துக்கள் எல்லோரும் தற்போது இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    பாகிஸ்தான் இப்படி செய்யும் என்று நினைக்கவில்லை.. உள்துறை அதிகாரிகள் அதிர்ச்சி.. புதிய கட்டுப்பாடு!பாகிஸ்தான் இப்படி செய்யும் என்று நினைக்கவில்லை.. உள்துறை அதிகாரிகள் அதிர்ச்சி.. புதிய கட்டுப்பாடு!

    என்ஆர்சி என்றால் என்ன

    என்ஆர்சி என்றால் என்ன

    1951ல் உருவாக்கப்பட்ட குடிமக்களின் தேசிய பதிவேட்டில் (National Register of Citizens) இந்திய மக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டது. இதை வருடம் வருடம் புதுப்பித்து வருகிறார்கள். இதில் பெயர் இல்லாத மக்கள் இந்தியாவில் வசிக்க தகுதியற்றவர்களாக மாறுவார்கள். இந்தியாவில் அகதி கோரிக்கை வைத்து குடியேறும் மக்களின் பெயர்கள் இதில் குடிமகனாக ஏற்றுக்கொண்ட பின் சேர்க்கப்படும்.

    என்ன வந்தது

    என்ன வந்தது

    இந்த நிலையில் நாளை இந்த குடிமக்களின் தேசிய பதிவேடு வெளியிடப்படுகிறது. இதில் பல லட்சம் அகதிகளின் பெயர்கள் இடம்பெற்று இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். வங்கதேசத்தில் இருந்து அசாமில் குடியேறி இந்துக்களின் பெயர்கள் இதில் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் 50 வருடமாக அகதிகளாக நாட்டில் இருக்கிறார்கள்.

    என்ன விதிமுறை

    என்ன விதிமுறை

    அகதிகள் உரிமை அவர்களுக்கு அளிக்கப்பட்ட பின் சிறிய அளவு நிலமும், வாக்களிக்கும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இதை அனைத்தையும் பறித்துக் கொண்டு இவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட உள்ளனர். இவர்கள் எல்லோரும் இந்தியாவில் இருப்பார்களா, இருக்க மாட்டார்களா என்று நாளை தெரிந்துவிடும்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    வங்கதேச மதக்கலவரத்தின் போது பல்லாயிரக்கணக்கில் மக்கள் அங்கிருந்து அசாம் வந்தனர். 1964-1968 காலத்தில் ஆயிரக்கணக்கில் அவர்கள் இங்கு வந்தனர். கடந்த 50 வருடத்தில் அவர்கள் இந்தியாவிலேயே வசித்து, குடும்பங்கள் நாடு முழுக்க பரவி, பல லட்சம் பேர் இந்திய மண்ணை நம்பி உள்ளனர்.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    ஆனால் இவர்களில் பலரின் பெயர் கடைசியாக வெளியான குடிமக்களின் தேசிய பதிவேட்டில் இல்லை. குறைந்தபட்சம் குடும்பத்தில் இரண்டு உறுப்பினர்களின் பெயர்களாவது இதில் விடுபட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மீண்டும் அகதிகளாக விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய பட்டியல் வெளியாக உள்ளது.

    என்ன வாய்ப்பு

    என்ன வாய்ப்பு

    இந்த பட்டியலில் பெயர் இருந்தால்தான் அவர்கள் இந்தியாவில் வசிக்க முடியும். இல்லையென்றால் மீண்டும் அகதியாக விண்ணப்பித்துவிட்டு காத்திருக்க வேண்டும். அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். அசாமில் பல லட்சம் மக்கள் இதனால் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.

    பட்டியல்

    பட்டியல்

    இந்த புதிய பட்டியலில் தங்கள் பெயர் இருக்குமா, இல்லை மீண்டும் அகதியாக விண்ணப்பிக்க வேண்டுமா, அல்லது மொத்தமாக நாட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்று தெரியாமல் குழப்பத்தில் தவித்து வருகிறார்கள். இதில் பலர் 50 வருடமாக இந்தியாவில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அசாமில் மட்டும் குறைந்தபட்சம் 1 லட்சம் பேர் இப்படி சிக்கலை சந்திக்க வாய்ப்புள்ளது.

    English summary
    Lakhs in Assam may have to leave the country after the final NRC list which will come tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X