For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மிசோரமில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெண்,, 47 ஆண்டுகளுக்கு பின்னர் போட்டி!

Google Oneindia Tamil News

ஐசால்: மிசோரமில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் லல்த்லா முனி என்ற பெண் போட்டியிடுகிறார்.

மிசோரம் மாநிலத்துக்கு வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி முதற்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் 7,84,405 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதில் 4.02,408 பேர் பெண்கள் ஆவர். 3,81,991 பேர் ஆண்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் மட்டுமே உள்ளனர்.

1972-ஆம் ஆண்டிலிருந்து பிரிக்கப்பட்டு மிசோரம், தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அப்போது முதல் இதுவரை 12 லோக்சபா தேர்தல்கள் நடந்துள்ளன.

அதிகம்

அதிகம்

இதுவரை ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவில்லை, இந்த லோக்சபா தேர்தலில் மிசோரமில் ஆண் வாக்காளர்களை விட 20 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

தொண்டு நிறுவனம்

தொண்டு நிறுவனம்

எனினும் பெண்கள் போட்டியிடாமல் இருந்தனர். ஆனால் தற்போது முதல் முறையாக பழங்குடியின பெண் லல்த்லா முனி சுயேச்சையாக போட்டியிடுகிறார். 10-ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

உலக மக்கள்தொகை

உலக மக்கள்தொகை

இவருக்கு 5 பேரப்பிள்ளைகள் உள்ளனர். இஸ்ரேலில் இருந்து இடம் பெயர்ந்த யூத பழங்குடியினர் மிசோரம், திரிபுரா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் மியான்மர், வங்கதேசத்திலும் வசித்து வருகின்றனர். இவர்கள் உலக மக்கள் தொகையில் குறைந்து வருகின்றனர்.

6 வேட்பாளர்கள்

6 வேட்பாளர்கள்

இவர்களது பிரிவின் பெயர் வெள்ளந்தியாகும். யூத இன மக்களின் நலன்காக்க இந்த தேர்தலில் போட்டியிடுமாறு கடவுள் தனக்கு சிக்னல் கொடுத்துவிட்டதாக கூறுகிறார். அரசியல் நிபுணர்களின் பார்வையில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும் ஜோரம் மக்களின் இயக்கம் அமைப்புக்கும்தான் முக்கிய போட்டி நடைபெறும். ஐசால் 1 தொகுதியில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் தலையெழுத்து மே 23-ஆம் தேதி தெரியவரும்.

English summary
For the first time in the Lok Sabha elections in Mizoram, a woman, Lalthlamuani, 63, is trying her luck.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X