For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லாலு வழக்கு.. முக்கா முக்கா மூனாவது வாட்டியாக தீர்ப்பு ஒத்திவைப்பு!

லாலு வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    லாலுவை கோர்த்துவிட்ட அவரது நலம் விரும்பிகள்! கோபத்தில் நீதிபதி- வீடியோ

    ராஞ்சி: லாலு வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதாக ராஞ்சி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவபால் சிங் தெரிவித்துள்ளார். நாளை தீர்ப்பு விவரம் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    லாலு பிரசாத் மீதான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு கடந்த 21 வருடங்களாக நடந்து வந்தது. 1990-ம் ஆண்டு மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பாட்னா ஐகோர்ட் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போது ஆரம்பித்த வழக்கு விசாரணை கடந்த வருடம்தான் முடிந்தது.

    Lalu case sentence has deferred again

    இந்த நிலையில் டிசம்பர் இறுதி வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு விவரம் கொடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் முதலில் ஜனவரி இரண்டாம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அன்று இந்த வழக்கில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர் விந்தேஷ்வரி பிரசாத் திடீரென மரணமடைந்தார். அதனால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    இதனையடுத்து, லாலு உட்பட 16 பேருக்கான தண்டனை விபரங்கள் நேற்று அறிவிக்கப்படும் எனப்பட்டது. ஆனால் லாலு மீது கோபத்தில் இருந்த நீதிபதி சிவபால் சிங் நேற்றும் தண்டனையை அறிவிக்காமல் ஒத்திவைத்தார்.

    பின் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றும் நீதிபதி தீர்ப்பு விவரங்களை அளிக்க மறுத்துவிட்டார். மேலும் நாளை தீர்ப்பு விவரம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

    English summary
    Lalu hearing has been deferred again today in court.The quantum of sentence has been postponed to tomorrow. The sentencing is in connection with the Rs 950 crore fodder scam case. The former Bihar chief minister Lalu and 15 others are convicted in the case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X