For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ராம்நாத் கோவிந்த், தலித் அல்ல என்று லாலு பிரசாத் கூறியதுதான் சிபிஐ ரெய்டுக்குக் காரணமா?

பாஜக ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல என்று கூறிய இரண்டு நாட்களில் லாலு வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்ற கேள்வியை எழுப

By Suganthi
Google Oneindia Tamil News

பாட்னா: ஆர்ஜேடி கட்சித் தலைவரும் முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இது, அவர் 'மீரா குமார் பீகாரின் மகள்', 'ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல' என்று கூறியதன் எதிர்வினையாக சிபிஐ சோதனை நடத்தப்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆர்ஜேடி கட்சித் தலைவரும் முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிராசாத்துக்கு சொந்தமான 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. இருதினங்களுக்கு முன்பு பாட்னாவில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் 21ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் சிறப்புரை ஆற்றிய லாலு, மத்திய அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

 2019-ல் நாடாளுமன்றம் நமதே

2019-ல் நாடாளுமன்றம் நமதே

பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து 2019ஆம் ஆண்டு நடக்கிவிருக்கும் நாடாளுமன்றத்தில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். பாஜக அரசை தோற்கடிக்க வேண்டும் என லாலு வலியுறுத்திக் கூறினார்.

 அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை

மேலும் நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவி வருகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஊடகங்களும் எதிர்க்கருத்துகள் கூறினால் அவர்கள் உடனே அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர் எனவும் மிகக் கடுமையாக மத்திய அரசை சாடினார்.

 ராம்நாத் தலித்தே அல்ல

ராம்நாத் தலித்தே அல்ல

மேலும், பாஜக முன்னிறுத்தியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தலித் அல்ல. அவர் குஜராத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் எனவும், காங்கிரஸ் வேட்பாளரான மீராகுமார் பீகார் மண்ணின் மகள் எனவும் தெரிவித்தார்.

 அச்சுறுத்துகிறதா மத்திய அரசு?

அச்சுறுத்துகிறதா மத்திய அரசு?

ஆர்ஜேடி கட்சி விழாவில் லாலு மத்திய அரசையும் பாஜக முன்னிறுத்திய வேட்பாளர் குறித்தும் விமர்சித்த இரண்டு நாட்களில் லாலு வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்துவது அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்குத்தான் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

English summary
Two days before Lalu criticized Bjp government and its presidential candidate. After his hard criticism cbi raid is going on Lalu's house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X