For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள 5 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்த லாலு பிரசாத்

மகனின் திருமணத்தில் கலந்து கொள்ள 5 நாட்களுக்கு பரோல் கேட்டு லாலு பிரசாத் விண்ணப்பித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

ராஞ்சி: தனது மூத்த மகனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக 5 நாட்களுக்கு பரோல் கோரி லாலு பிரசாத் விண்ணப்பித்துள்ளார்.

பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டார். மொத்தம் 5 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் 3 வழக்குகளில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 11 ஆண்டுகளுக்கு மேல் அவருக்கு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது.

Lalu Prasad applies for 5 days parole to attend sons wedding

இதனால் அவர் கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் தனக்கு உடல்நிலை எனக் கூறி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இதனிடையே இவரது மூத்த மகனும் எம்எல்ஏவுமான தேஜ் பிரதாப் யாதவ், வரும் 12-ஆம் தேதி கட்சி எம்எல்ஏ சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய் என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். பாட்னாவில் நடைபெறும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள லாலு விரும்புகிறார்.

இதையடுத்து சிறைத் துறை ஐஜியிடம் வரும் 10 -ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பரோல் வழங்குமாறு லாலு விண்ணப்பித்துள்ளார். கட்நத ஏப்ரல் 18-ஆ்ம தேதி தேஜ் பிரதாப்பின் நிச்சயதார்த்த விழாவில் லாலு கலந்து கொள்ளாததால் உங்களை மிஸ் செய்தேன் அப்பா என்று அவர் டுவீட்டியிருந்தார்.

English summary
RJD president Lalu Prasad, serving sentence in fodder scam cases, has sought a five-day parole to attend the wedding of his elder son later this week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X