For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாலு பிரசாத் யாதவ் மகன் மீது சட்டவிரோத 'மண் விற்பனை' மோசடி புகார்... பஞ்சாயத்து கிளப்பும் பாஜக!

லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜ் பிரதாப், 30 கோடி மதிப்புள்ள நிலத்தை, மோசடி செய்து தன் பெயருக்கு மாற்றி, அந்த நிலத்திலிருந்து அரசுக்கே மண் விற்று லாபம் சம்பாதித்தாக பீகார் பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி ப

By Suganthi
Google Oneindia Tamil News

பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிராத் யாதவ் சிக்கிக் கொண்டதுபோல, தற்போது அவருடைய மகனும் அமைச்சருமான தேஜ் பிரதாப் மீது நில மோசடி வழக்கும், அமைச்சராக இருந்துகொண்டு, அரசு விலங்கியல் பூங்காவுக்கு மண் விற்று பல லட்சங்கள் லாபம் பார்த்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

லாலுவின் மகனும் அமைச்சருமான தேஜ் பிரதாப், பாட்னா புறநகரில் 30 கோடி மதிப்புள்ள நிலத்தை பல தில்லுமுல்லுகளை செய்து தங்கள் குடும்பத்துக்கு மாற்றியுள்ளார். இரண்டு ஏக்கர் நிலத்தை வைத்து அவர் அரசுக்கே மண் விற்று லாபம் சம்பாதிப்பதாக பாஜக தலைவர் சுஷில் குமார் பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

Lalu Prasad's son Tej Pratap accused by Bihar BJP leader Sushil kumar modi

இந்த இரண்டு ஏக்கரின் மதிப்பு தற்போது 30 கோடி. அந்த நிலத்தை 2008ல் லாலுவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த சரளா குப்தா என்பவர், ரயில்வேயில் 15 வருடத்துக்கு உணவு விடுதி நடத்த ஒப்பந்தம் பெறுவதற்காக, லாலு குடும்பத்தாருக்கு கொடுத்துள்ளார். அதில் பல தில்லுமுல்லுகளைச் செய்து தேஜ் பிரதாப் தன் பெயருக்கு மாற்றியுள்ளார்.

ஆனல் அந்த நிலத்தை இன்னொருவருக்கு லீஸுக்குக் கொடுத்ததாக ஆவணங்கள் இருக்கின்றன. ஆனால், அந்த நிலத்தில் இருந்து மண் எடுத்து அரசு விலங்கியல் பூங்காவுக்கு விற்ற தேஜ் பிரதாப், இதற்காக 50 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளார். மாட்டுத் தீவனத்தில் ஊழல் செய்கிறார்கள் என்றால்.... மண்ணிலுமா ஊழல் செய்ய முடியும் என வாய் பிளந்து நிற்கிறார்கள் பீகார் மக்கள்.

ஆனால், எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தால், நாங்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை நிரூபிப்போம் என சவால் விடுகிறார் லாலு மகன் தேஜ் பிரதாப்.

English summary
In Bihar, Lalu Prasad's son is criticized and accused by BJP leaded Sushil kumar modi that he sold soil to govt. zoological park and got lump sum money.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X