For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்.. ராஞ்சிக்கு மாற்றம்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து லாலு கட்டாய வெளியேற்றம்.. ?- வீடியோ

    டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் பெரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    மாட்டு தீவன வழக்கில் சிறைத்தண்டனை பெற்று இருக்கும் லாலு பிரசாத், ராஞ்சி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு ரத்த கொதிப்பு, சக்கரை வியாதி உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருக்கிறது என்று ராஞ்சி ராஜேந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    Lalu Prasad Yadav sent out from AIIMS, Doctors saying that He is alright!

    பின் அங்கு மருத்துவம் சரியில்லை என்று, சிபிஐ நீதிமன்ற அனுமதியுடன், கடந்த மார்ச் 29ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது லாலு பிரசாத் யாதவ், அந்த மருத்துவமனையில் இருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இதற்கு அவர் பெரிய எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    அவர் உடல்நிலைசரியாகிவிட்டது , ராஞ்சி மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடரலாம் என்று அவர் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் இது தன்னை கொலை செய்ய நடக்கும் சதி என்று லாலு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

    மேலும் நான் ராஞ்சி மருத்துவமனைக்கு செல்ல விரும்பவில்லை, அங்கு சரியான மருத்துவர்கள் இல்லை. அங்கு நான் சென்றால் என் உயிருக்கு ஆபத்து. எய்ம்ஸ் மருத்துவமனையின் இந்த முடிவிற்கு பின் யார் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும் என்று லாலு கூறியுள்ளார்.

    English summary
    Lalu Prasad Yadav sent out from AIIMS, Doctors are saying that He is alright. RJD Chief Lalu Prasad Yadav leaves after being discharged from All India Institutes of Medical Sciences (AIIMS). He was undergoing treatment for various ailments related to heart and kidney here & will now be taken to Ranchi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X