For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீகாரில் "அதிமுக அரசுக்கு திமுக அதிரடி ஆதரவு"!

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் ஐக்கிய ஜனதா தள அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கப்படும் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலுபிரசாத் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் தோல்வியைத் தழுவியது. இத்தேர்தலிக்குப் பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார்.

Lalu's RJD announces support to Jitan Ram Manjhi's JD(U) government in Bihar

அவரைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜிதன்ராம் மஞ்சி அம்மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். ஜிதன்ராம் மஞ்சி நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் பரம வைரியான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத யாதவ், அதிரடியாக ஐக்கிய ஜனதா தளம் அரசை நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்று அறிவித்துள்ளார்.

பீகாரைப் பொறுத்தவரை நிதிஷின் ஐக்கிய ஜனதா தளமும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளமும் தமிழகத்து திமுக- அதிமுகவாகத்தான் இருந்து வந்தன. மாறிய அரசியல் சூழலில் தற்போது அம்மாநில அதிமுகவும் திமுகவும் கை கோர்த்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lalu Prasad Yadav's RJD on Thursday announced support to the new JD(U) government of Jitan Ram Manjhi in Bihar. Jitan Ram Manjhi, a 'mahadalit' and once a clerk in the Posts and Telegraph department and who had stints as a minister in Congress, RJD and JD(U) governments since 1980, was sworn in as the 32nd Chief Minister of Bihar on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X