For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த கூத்தை பாருங்க.. வேட்புமனுவில் லாலுவின் மூத்த மகனுக்கு வயது 25.. இளைய மகனுக்கு வயது 26

By Mathi
Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், இளையமகன் தேஜஸ்வி பிரசாத்தைவிட ஒரு வயது குறைந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

பீகார் மாநில சட்டசபை தேர்தலில் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், வைஷாலி மாவட்டத்தின் மகுவா சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இளைய மகன் தேஜஸ் பிரசாத் யாதவ், வைஷாலி மாவட்டத்தில் ரஹோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

தேஜ்பிரதாப் யாதவ் நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். கடந்த அக்டோபர் 3-ந் தேதியன்று தேஜஸ்வி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வேட்பு மனுக்களில் மூத்த மகன் தேஜ்பிரதாப்புக்கு வயது 25; இளைய மகன் தேஜஸ்விக்கு வயது 26 என குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதேபோல் தேஜ்பிரதாப் யாதவை விட தேஜஸ்விதான் அதிக பணக்காரர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேஜஸ்வியின் அசையும் சொத்து மதிப்பு ரூ1,40,93,822.23 ; அசையா சொத்து மதிப்பு ரூ 88,72,500.

தேஜ்பிரதாப்பின் அசையும் சொத்து மதிப்பு ரூ 1,12,25,199.90; அசையா சொத்து மதிப்பு ரூ 91,52,500 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேஜ்பிரதாப் இண்டர்மீடியட் படித்துள்ளதாகவும் இளையமகன் தேஜஸ்வினி 9-வது மட்டுமே படித்துள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், எங்கள் தவறு எதுவும் இல்லை... வாக்காளர் அடையாள அட்டையில் குறிப்பிட்டுள்ளதைத்தான் நாங்கள் தெரிவித்திருக்கிறோம்.. அது அவர்கள் பிழையாக அச்சிட்டுவிட்டார்கள் என்றார்.

இதேபோல் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், வாக்காளர் அடையாள அட்டையில் என்ன குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதைத்தான் இருவரும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளனர் என்றார்.

லாலுன்னாலே சர்ச்சைதானோ!

English summary
RJD chief Lalu Prasad's elder son Tej Pratap Yadav is a year junior to his younger brother Tejashwi Yadav, according to an affidavit filed with the returning officer of Mahua assembly seat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X