For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

''லாலுவுக்கு ஏகப்பட்ட நோய்கள் இருக்கு.. தண்டனையைப் பார்த்துப் போட்டு கொடுங்க'

By Mathi
Google Oneindia Tamil News

Llalu prasad
ராஞ்சி: தீவன ஊழல் வழக்கில் சிறையில் இருக்கும் பீகார் முன்னாள் முதல்வருக்கு லாலுவுக்கு நிறைய நோய்கள் இருப்பதால் அவருக்கு குறைந்த கால தண்டனை கொடுக்க வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

தீவன ஊழல் வழக்கில் லாலு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கான தண்டனை குறித்து இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது சிபிஐ தரப்பில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அதிகபட்சமாக 7 ஆண்டுகால தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

ஆனால் லாலுவின் வழக்கறிஞர்களோ, அவருக்கு வயதாகிவிட்டது. அவர் ஏகப்பட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகிறார். நாட்டின் ரயில்வே துறையை லாபம் அடையச் செய்த பொறுப்புமிக்க குடிமகன். அதனால் குறைந்தகால தண்டனை கொடுங்கள் என்று வாதிட்டனர்.

கடைசியாக லாலுவுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனையும் ரூ25 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

English summary
Lalu Prasad's lawyers today argued that he was too old and suffered from many diseases, to counter the CBI's plea for maximum punishment of seven years in jail for the Bihar politician in the fodder scam case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X