For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிளார்க்காக இருந்து முதல்வராக உயர்ந்த பால்காரரின் மகன் லாலு பிரசாத் யாதவ்

By Siva
Google Oneindia Tamil News

பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் ஒரு பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்தவர்.

முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் லூலுவின் பின்னணி என்னவென்று பார்ப்போம்.

பால்காரரின் மகன்

பால்காரரின் மகன்

லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 5 சகோதரர்கள். வீடு வீடாகச் சென்று பால் ஊற்றிய தனது தாய் மரிசியா தேவியுடன் சிறுவன் லாலுவும் செல்வார்.

கிளார்க்

கிளார்க்

பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் லூலுவின் அண்ணன் பியூனாக இருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் தங்கி தான் லூலு பி.என். கல்லூரியில் படித்து அண்ணன் வேலை பார்த்த கல்லூரியிலேயே கிளார்க்காக சேர்ந்தார். அவர் 1990ம் ஆண்டில் முதல்வராகும் வரையில் இங்கு தான் தங்கி இருந்தார்.

ஜனதா கட்சி

ஜனதா கட்சி

ஜனதா கட்சியின் சார்பில் லாலு கடந்த 1977ம் ஆண்டு லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

வெஸ்பா, ஜீப்

வெஸ்பா, ஜீப்

கல்லூரியில் படிக்கையில் லாலு 10ஏ பேருந்தில் தான் சென்றுள்ளார். 1977ம் ஆண்டு எம்.பி. ஆன போது அவர் டெல்லிக்கு சோன்பத்ரா எக்ஸ்பிரஸில் சென்றுள்ளார். அதன் பிறகு வெஸ்பா ஸ்கூட்டர் வாங்கி இருக்கிறார். 1980ம் ஆண்டு அவர் லோக்சபா தேர்தலில் தோற்றாலும், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார். அப்போது பயன்படுத்தப்பட்ட ஜீப் ஒன்றை வாங்கினார்.

தேர்தலில் வெற்றி

தேர்தலில் வெற்றி

லாலு 1985ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றார். வி.பி. சிங் பிரதமராக இருந்தபோது லாலு லோக் சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வர்

முதல்வர்

1990ம் ஆண்டு ஜனதா கட்சி பீகாரில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. அப்போதைய துணை பிரதமர் தேவி லால் லாலு பீகாரின் முதல்வராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் பிரதமர் வி.பி. சிங்கோ ராம் சுந்தர் தாஸை முதல்வராக்க விரும்பினார். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில் லாலு வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

அத்வானியை கைது செய்த லாலு

அத்வானியை கைது செய்த லாலு

பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ரத யாத்திரை மேற்கொண்டபோது அது சமூக நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி கடந்த 1990ம் ஆண்டு பீகார் மாநிலம் சமஸ்திபூரில் அவரை கைது செய்ய வைத்தார் லாலு.

மீண்டும் முதல்வர்

மீண்டும் முதல்வர்

லாலு மீண்டும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார். ஆனால் 1997ம் ஆண்டு மாட்டு தீவன ஊழல் வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தில் அவர் சரண் அடைந்தார். முன்னதாக அவர் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கிவிட்டு சென்றார். சிறையில் இருந்து கொண்டே தனது மனைவி மூலம் ஆட்சி செய்தார்.

ரயில்வே அமைச்சர்

ரயில்வே அமைச்சர்

2004ம் ஆண்டு லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சர் ஆனார். அவரது நிர்வாகத் திறமைக்காக பெரிதும் பாராட்டப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி கூட்டங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் அருகே அவருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

பல முறை சிறைக்கு

பல முறை சிறைக்கு

லாலு 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை ஜனதா கட்சியின் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டங்கள் நடத்தி பல முறை சிறைக்கு சென்று வந்துள்ளார்.

English summary
Former Bihar CM cum RJD chief Lalu Prasad Yadav was sent to jail in fodder scam on monday. Lalu who was born as a milkman's son rose to the level of chief minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X