For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஜனவரி 1-ல் அமல் -ஜெய்ராம் ரமேஷ்

By Mathi
Google Oneindia Tamil News

Land Acquisition Act to come into force from January 1
டெல்லி: விவசாயிகளுக்கு நியாயமான முறையில் இழப்பீடு வழங்குவதற்கு வகை செய்யும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஜனவரி 1ந் தேதியன்று நடைமுறைக்கு வருவதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.

நிலம் கையகப்படுத்தும் சட்டம் நாடாளுமன்றத்தில் மழைக் காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் 27ந் தேதி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், 119 ஆண்டுகளுக்கு முந்தைய நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்குப் பதிலாக புதிதாக வேறு ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் ஜனவரி 1-ந் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.

English summary
The new Land Acquisition Act to provide just and fair compensation to farmers will come into force from January 1, Rural Development Minister Jairam Ramesh said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X