For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடவுளின் தேசத்தில் அதீத கனமழை.. கோட்டயம், இடுக்கியில் அபாயகரமான நிலைமை.. மீட்பு பணியில் ராணுவம்!

Google Oneindia Tamil News

கோட்டயம்: கடவுளின் தேசமான கேரளாவில் மிக அதீத கனமழை இடைவிடாமல் பெய்து வருகீறது . கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. விடாமல் கொட்டி வரும் அதீத மழையால் இருமாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 10 பேர் பலியாகி உள்ளனர். 17 பேர் மண்ணில் புதைந்தனர்.

அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம், பத்தினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட்அலாரட் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நாளைக்கு பாருங்க.. கேரளாவில் 150 முதல் 200 மி.மீ. மழை கொட்டும்.. உஷாராக இருங்கள்.. வெதர்மேன்நாளைக்கு பாருங்க.. கேரளாவில் 150 முதல் 200 மி.மீ. மழை கொட்டும்.. உஷாராக இருங்கள்.. வெதர்மேன்

இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புலா, மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் விடுத்து இருந்தது. மேலும் கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.

கோட்டயம் இடுக்கி

கோட்டயம் இடுக்கி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி இன்று அதிகாலை முதலே கேரளாவின் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் இடை விடாமல் கனமழை பெய்து வருகிறது. இரண்டு மாவட்டங்களுமே மலைப்பகுதிகள் மற்றும் பள்ளத்தாக்குகளை அதிகம் கொண்ட பகுதிகள் என்பதால் அங்கு அதீத மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மலைப்பகுதிகளில் உள்ள சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டன.

17 பேர் மாயம்

17 பேர் மாயம்

சாலைகளில், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருங்கெடுத்துஓடியது.காற்றாற்று வெள்ளம் காரணமாக சாலைகளில் வாகனங்களில் பயணிப்பது கூட கடினமாக இருந்தது. மக்கள் அச்சத்துடன் பயணித்தனர். கோட்டயம் மாவட்டத்தில் கூட்டுகல் அருகே பிலாபள்ளி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் 13 பேர் இருந்திருக்கலாம்என்று கருதப்படுகிறது. அனைவரும் மண்ணில் புதைந்தனர். அந்த பகுதியினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதுபோல், இடுக்கி மாவட்டம், கொக்கையாறு அருகே உள்ள பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கும் 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 10 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும், 10க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

கார் வெள்ளம்

கார் வெள்ளம்

மேலும், இடுக்கி மாவட்டத்தில் ஆன்சி என்ற பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியானர். இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் அடித்து செல்லப்பட்டது. இதில் இருந்த வாலிபரும், இளம்பெண்ணும் வெள்ளத்தில் சிக்கி இறந்தனர். இருவர் சடலங்களும் மீட்கப்பட்டன.

வெள்ளம்

வெள்ளம்

திருவனந்தபுரம் கண்ணம்மூலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ெநகர் தீப் குமார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு பலியானார். கோட்டயம் அருகே பூஞ்ஞாறில் அரசு பஸ் வெள்ளத்தில் மூழ்கியது. அப்பகுதியினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டனர்.

வெள்ளம் அதிகம்

வெள்ளம் அதிகம்

கனமழையை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக ராணுவத்தின் உதவியை முதல்வர் பினராய் விஜயன் கேட்டுள்ளார். கோட்டயத்தில் மீட்பு பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது. விமானப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளனர். கோவை மாவட்டம், சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொச்சி விரைந்துள்ளன.

வாகமன் சாலை

வாகமன் சாலை


இடுக்கியின் கொக்காயரில் இருந்து மூன்று வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஏழு பேர் அங்கு காணவில்லை என்று கூறப்படுகிறது.
கோட்டயம் வழியாக ஓடும் ஆறுகளான மணிமலையார் மற்றும் மீனச்சில் ஆகியவற்றில் வெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நிலச்சரிவு காரணமாக முண்டக்காயம் ஏலம்காடு-வாகமன் சாலையும் அடைக்கப்பட்டுள்ளது. எனினும், இது மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கொடுங்கா வனப்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மக்கள் அவதி

மக்கள் அவதி

முக்கிய சாலைகளிலும், சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. கால்வாய்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டதால், வீட்டு வளாகங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல்வேறு சுற்றுலா தளங்களை பார்வையிடுவதற்காக விடுமுறையை ஒட்டி இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு வந்தவர்கள் அங்கு சிக்கித் தவிக்கின்றனர்.

இடுக்கி வர வேண்டாம்

இடுக்கி வர வேண்டாம்

முண்டக்காயம்-எருமேலி சாலையில் உள்ள தரைப்பாலம் மற்றும் அருகில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொந்தன்புழா அருகேயுள்ள ராமனாயில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெள்ளம் காரணமாக வெளியேறினர். அதே நேரத்தில் முறிகல்லும்புரத்தில் சில குடும்பங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன. மூணாறு, தேக்கடி, இடுக்கி போன்ற சுற்றுலாதளங்ளுக்கு மக்கள் செல்வதை தவிர்ப்பது நல்லது. வெள்ளம் மற்றும் மழை முடிவுக்கு வந்து இயல்பு நிலை திரும்பியதை உறுதி செய்த பின்னர் செல்வது நல்லது.

English summary
Heavy rains due to Red Alert in many parts of Kerala. Kottayam and Idukki districts in particular have received heavy rainfall. Landslides have been reported in many parts of the two districts due to incessant rains. Three people have been killed in a landslide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X