For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும்.. நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு

அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி துணை வழக்கின் அப்பீல் மனு தள்ளுபடி- வீடியோ

    டெல்லி: அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு மசூதி அவசியமா என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் ஒரே தீர்ப்பு வழங்கினார்கள். நீதிபதி அப்துல் நசீர் தனி தீர்ப்பு வழங்கினார்.

    Larger bench needs to decide in this case says Justice S Nazeer

    இதில் அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற தேவையில்லை என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் தீர்ப்பளித்தனர். மேலும் இந்த வழக்கு இஸ்லாம் மதத்திற்கு மசூதி தேவையா என்பதை பற்றியது கிடையாது, இந்த நில கையகப்படுத்தும் விவகாரத்தில் மசூதி தேவையா என்பதை பற்றியதுதான் என்று விளக்கம் அளித்தனர்.

    ஆனால் இரண்டு நீதிபதிகளின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பை நீதிபதி அப்துல் நசீர் வழங்கினார். அயோத்தி துணை வழக்கை அரசியல் சாசன அமர்விற்கு மாற்ற வேண்டும். இது மதம் தொடர்பான வழக்கு என்பதால், இதை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்ற வேண்டும். அரசியல் சாசன அமர்வே வழிபாடு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க முடியும் என்று நீதிபதி அப்துல் நசீர் தீர்ப்பு வழங்கினார்.

    ஆனால் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி அசோக் பூஷன் ஆகிய இரண்டு நீதிபதிகளின் தீர்ப்பு ஒன்றாக இருப்பதால் இந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படாது.

    English summary
    Ayodhya matter (Ismail Faruqui case): Larger bench needs to decide what constitutes essential religious practice, says Justice S Nazeer
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X