For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அந்த 15 நிமிடம்தான் முக்கியம்.. சந்திரயானுக்கு காத்திருக்கும் திக் நொடிகள்.. இஸ்ரோ சொன்ன சுவாரசியம்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Last 15 minutes are the most crucial time for Chandrayaan-2

    டெல்லி: சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்கு முன் 15 நிமிடங்கள் மிகவும் திரில்லிங்காக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அந்த 15 நிமிடங்கள் மிக முக்கியமானது என்று தெரிவித்துள்ளனர்.

    உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும் அந்த நாள் நெருங்கிவிட்டது. சந்திரயான் 2 நிலவில் இறங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருக்கிறது.

    சந்திரயான் 2 ஏற்கனவே நிலவை நெருங்கிவிட்டது. தற்போது இது நிலவை 35 கிமீ தூரத்தில் இருந்து சுற்றிக்கொண்டு இருக்கிறது. சரியாக சொல்லவேண்டும் என்றால் 1 மணி நேர பஸ் மினிபஸ் டிராவல்.. அவ்வளவே!

    மகன் அடைக்கப்பட்ட அதே அறையில் தந்தை.. இனி சிறையில் சிதம்பரத்தின் ரொட்டீன் வொர்க் இதுதான்!மகன் அடைக்கப்பட்ட அதே அறையில் தந்தை.. இனி சிறையில் சிதம்பரத்தின் ரொட்டீன் வொர்க் இதுதான்!

    இதே தூரம்

    இதே தூரம்

    சந்திரயான் 2 இன்று இரவு வரை இதே தூரத்தில் இருந்து நிலவை சுற்றிக் கொண்டு இருக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக நிலவில் இறக்கப்படும். சந்திராயன் 2ல் மூன்று முக்கியமான கருவிகள் அடங்கி உள்ளது. ஆர்பிட்டர் எனப்படும் நிலவை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து ஆராயும் சாட்டிலைட் போன்ற கருவி ஒன்று. இது ஏற்கனவே நிலவின் வட்டப்பாதையில் வைக்கப்பட்டுவிட்டது.

    இன்று நடக்கும்

    இன்று நடக்கும்

    அதன்பின் நிலவில் இறங்கி அதை சோதனை செய்யும் பிரக்யான் என்று அழைக்கப்படும் ரோவர் ஒன்று இதில் உள்ளது. இந்த ரோவரை தரையிறக்க உதவும் விக்ரம் என்ற லேண்டர் கருவி ஒன்று இதில் உள்ளது. இந்த விக்ரம் லேண்டர் கருவியும் நிலவில் சில ஆய்வுகளை செய்யும். இந்த இரண்டையும் தரையிறக்கும் நிகழ்வுதான் இன்று நடக்க உள்ளது.

    முதல்முறை

    முதல்முறை

    இதை தரையிறக்குவது ஒன்றும் அத்தனை சுலபமான காரியம் கிடையாது. ஏனென்றால் இந்தியா இதற்கு முன் வேறு எந்த கிரகத்திலும், துணை கிரகத்திலும் இப்படி ரோவர், லேண்டர் போன்ற சாதனங்களை தரை இறக்கியது கிடையாது. ஆம் சந்திரயான் 2 நிலவில் இறக்கப்படுவதுதான் இஸ்ரோவின் முதல் முயற்சி!

    எங்கு இருக்கிறது

    எங்கு இருக்கிறது

    இந்த சந்திரயான் 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இருக்கும் விக்ரம் லேண்டர்தான் நிலவில் இறங்கும். இது தற்போது நிலவை கடிகார முள் திசையில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது. இதன்மூலம் இதனுடைய வேகம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். தற்போது நிலவில் இருந்து இது 35 கிமீ தூரத்தில் உள்ளது.

    ஒரே வழி

    ஒரே வழி

    இது இன்று நள்ளிரவில் 30 கிமீ தூரத்தை அடையும். அதன் பின் நிலவை சுற்றுவதை நிறுத்திவிட்டு, நிலவில் தரையிறங்க தொடங்கும். பூமியில் இருப்பதை போல நிலவில் வளிமண்டலம் கிடையாது. அதேபோல் நிலவின் ஈர்ப்பு விசைக்கும், பூமியின் ஈர்ப்பு விசைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இதனால் முழுக்க முழுக்க எஞ்சின்களை நம்பி மட்டுமே சந்திரயான் 2 தரையிரங்கும்.

    வேகம் குறையும்

    வேகம் குறையும்

    சந்திரயான் 2ல் எதிர் உந்து விசையை அளிக்க எதிர்புறத்தில் சில எதிர் திரஸ்டர் எஞ்சின்கள் இருக்கும். இதன் மூலம்தான் சந்திரயான் 2 வேகம் குறைக்கப்படும். நிலவை நெருங்க நெருங்க எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்து விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும்.

    மிக மிக மெதுவாக

    மிக மிக மெதுவாக

    அதாவது 30 கிமீ தூரம் வந்த பின் இந்த எஞ்சின் இயக்கும். இது விட்டு விட்டு இயங்கும். நிலவிற்கு எதிர் திசையில் இது அழுத்தத்தை கொடுக்கும். இதன் மூலம் சந்திரயான் 2 மிக மிக மெதுவாக நிலவில் இறங்கும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் பாராசூட் போல இது செயல்படும். அதனால்தான் இதை ''சாப்ட் லேண்டிங்'' என்று கூறுகிறார்கள்.

    தேர்வு

    தேர்வு

    லேண்டரில் இருக்கும் ஏஐ சென்சார்கள் மூலம் நிலவில் தென் பகுதியில் எங்கே இறங்க வேண்டுமே என்று தீர்மானிக்கப்படும். இந்த ஏஐ சென்சார் முழுக்க முழுக்க சுயமாக இந்த முடிவை எடுக்கும் திறன் கொண்டது. இது முடிவெடுத்த பின் விக்ரம் கீழே இறங்கும். இதில் பாராசூட் இருக்காது. அதனால் எதிர் எஞ்சின்கள் மூலம் வேகம் குறைக்கப்படும்.

    ஐடியா

    ஐடியா

    கொஞ்சம் கொஞ்சமாக வேகம் குறைந்த 1 கிமீ நேரத்திற்கும் குறைவான வேகத்தில் மெதுவாக நிலவில் இறங்கும். இதில் கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது. கடைசி 15 நிமிடங்கள்தான் மிக கவனமாக கையாள வேண்டிய நேரம். நிலவில் சந்திரயான் 2 கால் பதிப்பதற்கு முன் இருக்கும் இந்த 15 நிமிடங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    இல்லை

    இல்லை

    இதற்கு முன் இஸ்ரோ இதை செய்தது கிடையாது. அதனால் இந்த 15 நிமிடங்களில் என்ன நடக்கும், சந்திரயான் 2 சரியாக தரையிறங்கி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நிலவில் கால்பதித்து சந்திரயான் 2 சிக்னல் ஒன்றை அனுப்பும் வரை இஸ்ரோ விஞ்ஞானிகள் நகத்தை கடித்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

    அதிகாலை

    அதிகாலை

    நாளை அதிகாலை 1 மணியில் (இன்று நள்ளிரவு) இருந்து 2 மணிக்குள் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க தொடங்கும். 1.30 மணியில் இருந்து 2.30 மணிக்குள் விக்ரம் முழுமையாக கீழே இறங்கும். 5-6 மணிக்குள் பிரக்யான் நிலவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும்.

    English summary
    Last 15 minutes are the most crucial time for Chandrayaan-2 says ISRO .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X