For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

100 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடந்த டிசம்பரில் கடும் வெப்பம் நிலவியது !

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் கடும் வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வானிலை ஆய்வு மையயம் பதிவின்படி கடந்த செப்டம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இடைப்பட்ட மாதங்களில் 1901 ஆம் ஆண்டிற்கு பிறகு அதாவது 115 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மாதங்களின் தான் கடுமையான வெப்பம் பதிவாகியுள்ளது.

last year December was the warmest in India in over 100 years

கடந்த ஆண்டுகளின் படி 2006, 2008 ,2009 மற்றும் 2012 ஆண்டுகளில் பதிவான சாதாரண வெப்பநிலையைக் காட்டிலும் டிசம்பரில் 1.2 செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. வளிமண்டலவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த உயர்ந்த வெப்பநிலைக்கு காரணம் புவி வெப்பமாதலின் தாக்கம் என கூறுகின்றனர். தொடர்ந்து புவி வெப்பமாவதற்கு எல் நினோவும் காரணம் எனக் கூறுகிறார் தேசிய காலநிலை மைய தலைவர்

எல் நினோ என்பது பசிபிக் கடலில், குறிப்பாக பூமத்திய ரேகை பகுதியில், கடல் பரப்பிலும் அதன் மேல் பகுதியில் உள்ள வான் பரப்பிலும், வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் தான் எல் நினோ. El Niño-Southern Oscillation (ENSO) என்பது இதன் விரிவாக்கம். எல் நினோ என்றால் ஸ்பானிஷ் மொழியில் குட்டிப் பையன் என்று அர்த்தம்.

எல் நினோவின் தாக்கம் காரணமாகவே கடந்த சில வருடமாக குறைந்த அளவு மழை பெய்துள்ளது. அதேபோல் கடந்த வருடம் பருவம் தவறி பெய்த மழையினால் எதிர் மறையான அளவிற்கு விவசாயம் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டது. மேலும் டிசம்பர் மாதம் சென்னையில் பெய்த பெரு மழைக்கும் இதன் பங்களிப்பு உண்டு என்கிறார்கள் அறிவியலாளர்கள்.

ஆனால், கடந்த ஆண்டு எல் நினோ காரணமாகவும் தமிழகத்தை சுற்றிய கடல் பகுதி வெப்பம் மிக மிக அதிகமாக இருந்ததாலும் பருவ மழையின் அளவும் பெரும் அளவு அதிகரித்துவிட்டது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன.

English summary
According to the Indian Meteorogical Department (IMD), December 2015 was the hottest in India the last 115 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X