For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் இடது ஜனநாயகக் கூட்டணி அபார வெற்றி - 93 வயது அச்சுதானந்தன் முதல்வராகிறார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள சட்டசபைக்கான 140 தொகுதிகளில் இடது ஜனநாயக முன்னணிக் கூட்டணி 85 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணி 46 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் இடது ஜனநாயக முன்னணிக் கூட்டணிக்கு கிடைத்துள்ளதை அடுத்து அந்த கட்சி ஆட்சியமைக்கிறது. 93 வயதான அச்சுதானந்தன் முதல்வர் நாற்காலியில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய கூட்டணி கடும் சரிவை சந்தித்துவரும் நிலையில் இங்கு தனி மெஜாரிட்டியுடன் கம்யூனிஸ்ட் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

LDF leading in 79 seats, UDF in 47 in Kerala

கேரளாவில் உள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த 16ம்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. ஆளும் காங்கிரஸ் - முஸ்லிம் கூட்டணி கூட்டணி ஒரு அணியாகவும், எதிர்க்கட்சியான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து பாஜக 3வது அணியாக களம் இறங்கினர்.

140 தொகுதிகளிலும் 109 பெண்கள் உள்பட 1203 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். எதிர்க்கட்சி தலைவரான 93 வயதுஅச்சுதானந்தன் மலம்புழா தொகுதியில் போட்டியிட்யார். தனக்கு அடுத்துவந்த காங்கிரஸ் வேட்பாளரை 23,142 வாக்கு வித்தியாசத்தில் இவர் தோற்கடித்தார்.இடது ஜனநாயக முன்னணியின் பினாராயி விஜயன் தர்மதம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

பாஜக வெற்றி

மூத்த பாஜக தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமாக ஓ.ராஜகோபால் நேமம் தொகுதியில் சிபிஎம்-எல்டிஎப் எம்.எல்.ஏ. வி.சிவக்குட்டி என்பவரை 8,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம் முதன் முதலாக கேரள சட்டப்பேரவைக்கு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் செல்கிறார்.

ஸ்ரீசாந்த் தோல்வி

ஆனால் பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், முன்னாள் தலைவர் வி.முரளிதரன், கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மற்றும் மூத்த தலைவர் கே.சுரேந்திரன் ஆகியோர் தோல்வி தழுவினர்.

வெற்றி பெற்ற பெரும் தலைகள்

ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் சாண்டி, உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, தொழிற்துறை அமைச்சர் பி.கே.குனாலிக்குட்டி, வருவாய் அமைச்சர் அடூர் பிரகாஷ், உணவு அமைச்சர் அனூப் ஜேகப், சமூக நல அமைச்சர் முன்னேர், முன்னாள் நிதியமைச்சர் கே.எம்.மணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அமைச்சர்கள் தோல்வி

ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சுங்கத்துறை அமைச்சர் கே.பாபு, தொழிலாளர் அமைச்சர் ஷிபு பாபு ஜான், வேளான் அமைச்சர் கே.பி.மோகனன், பி.கே.ஜெயலஷ்மி, மற்றும் காங்கிரஸ் முக்கிய வேட்பாளர் கே.சுதாகரன் ஆகியோர் தோல்வியடைந்தனர்.

தோல்வியை தழுவியவர்கள்

சபாநாயகர் என்.ஷாக்தன், மற்றும் துணைச் சபா நாயகர் பாலோடு ரவி ஆகியோரும் தோல்வி தழுவினர். இடது ஜனநாயக முன்னணியில் செபாஸ்டியன் பால், நிகேஷ் குமார் ஆகிய முக்கிய வேட்பாளர்களும் தோல்வி தழுவினார்

இடது ஜனநாயக முன்னணிக் கூட்டணி வெற்றி

கேரளாவில் ஆட்சி அமைக்க 71 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் மாலை 5 மணி நிலவரப்படி இடது ஜனநாயக முன்னணிக் கூட்டணி 85 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணி 46 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும், மற்றவை 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இதில் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இடங்கள் இடது ஜனநாயக முன்னணிக் கூட்டணிக்கு கிடைத்துள்ளதால் அம்மாநிலத்தில் அக்கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.

கிரீடம் சூட்டிய மக்கள்

கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சிமாற்றம் நிகழும். இம்முறை ஆளும்கட்சியாக உள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு மீண்டும் இடதுசாரிகளுக்கு கிரீடத்தை சூட்டியுள்ளனர் கேரள மாநில மக்கள்.

93 வயது முதல்வர்

கருணாநிதியைப் போலவே 93 வயதான வி.எஸ்.அச்சுதானந்தன் பக்கத்து மாநிலமான கேரளாவில் முதல்வர் நாற்காலியை எதிர்பார்த்து இத்தேர்தலில் பிரசாரம் மேற்கொண்டார். 13 நாட்களில் 13 மாவட்டங்களுக்குச் சென்ற அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 64 பிரசாரக் கூட்டங்களில் பேசி யுள்ளார். நாளொன்றுக்கு சுமார் 200 கிலோ மீட்டர் அவர் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். இளம் அரசியல்வாதிகளே வியக்கும் அளவுக்கும் இந்த இருவரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டது

English summary
Postal votes in favour of LDF in Kerala assembly election. Will the Kerala electorate deliver a decisive verdict? Or will it throw up a fractured one as a result of a tough triangular contest? will be answered after the results of 140 seats are declared for 14th Assembly elections in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X