For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி சுனாமியில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்! மொத்தமே '11' இடங்கள்தான்!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் வீசியடித்த மோடி சுனாமியில் அத்தனை கம்யூனிஸ்டுகளும் காணாமல் போய்விட்டன.

இந்திய அரசியலில் தீர்மானிக்கக் கூடிய சக்திகளில் ஒன்றாக இடதுசாரிகள் திகழ்ந்தது ஒருகாலம். மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து தலைமை வகித்து மூன்றாவது அணியெல்லாம் நடத்திப் பார்த்தவை இடதுசாரிக் கட்சிகள்.

2004 ஆம் ஆண்டு லோக்சபாவில் மொத்தமாக 60 இடதுசாரிகள் எம்.பி.க்கள் இருந்து அப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கண்களில் விரலை விட்டு ஆட்டியதெல்லாம் வரலாறு.

9 தான் சிபிஎம்க்கு

9 தான் சிபிஎம்க்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேற்குவங்கத்தில் 30 ஆண்டுகாலம் ஆண்ட மார்க்சிஸ்ட் கட்சி படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது.

சிபிஐக்கு ஒன்று

சிபிஐக்கு ஒன்று

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்தில் வென்றுள்ளது. மற்றொரு இடதுசாரிக் கட்சியான புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி 1 இடத்தை கைப்பற்றியுள்ளது. பார்வார்டு பிளாக் சுவடே இல்லாமல் போய்விட்டது.

மொத்தமே 11தான்..

மொத்தமே 11தான்..

ஆக மொத்தம் இடதுசாரிகள் 11 இடங்களைத்தான் கைப்பற்றியுள்ளனர்.

கேரள கட்சியாக சுருங்கியது..

கேரள கட்சியாக சுருங்கியது..

அதுவும் இந்த 11 இடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் 1; மார்க்சிஸ்ட்-4 ; புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி -1 என்று கேரளாவில்தான் கிடைத்திருக்கிறது. கம்யூனிஸ்டுகள் கேரள கட்சியாக சுருங்கிப் போய்விட்டது!

English summary
The Left Front, which was a key power behind the UPA-I regime in 2004 when it bagged an all-time high of 60 seats in the Lok Sabha now faces worst fall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X