For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேடு விளைவிக்கும் மேகியை விளம்பரம் செய்வதா?: நடிகை மாதுரி தீக்சித்திற்கு நோட்டீஸ்

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு மோனோசோடியம் க்ளூடாமேட் உள்ள மேகி நூடுல்ஸ் விளம்பர தூதரான பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இரண்டே நிமிடங்களில் நூடூல்ஸ் ரெடி என்றும், அதுவும் சத்தானது என்றும் கூறி மேகி நூடுல்ஸ் விளம்பரப்படத்தில் நடித்துள்ளார் பாலிவுட் நடிகை மாதுரி தீக்சித். இந்நிலையில் மேகியில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு மோனோசோடியம் க்ளூடாமேட் என்னும் ரசாயன உப்பு இருக்கின்றது என்றும், அதனால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் திறமை பாதிக்கப்படுவதாகவும் உத்தர பிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஆய்வு நடத்தி கண்டுபிடித்தது.

Legal Notice Served to Madhuri Dixit for Endorsing Maggi

இதையடுத்து கடைகளில் உள்ள மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை உடனடியாக திரும்பப்பெறுமாறு நெஸ்ட்லே நிறுவனத்திற்கு உத்தர பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மேகி மிகவும் சத்தானது என்று விளம்பரம் செய்தது குறித்து விளக்கம் கேட்டு ஹரித்வார் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மாதுரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எதன் அடிப்படையில் அவர் மேகி சத்தானது என்று கூறினார் என்பதற்கு 15 நாட்களுக்குள் மாதுரி விளக்கம் அளிக்க வேண்டும். மாதுரி விளக்கம் அளிக்கத் தவறினால் அவர் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெஸ்ட்லே நிறுவனமோ, தனது தயாரிப்பான மேகியில் மோனோசோடியம் க்ளூடமேட்டை கலப்பது இல்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

English summary
Haridwar Food and Drug Administration has sent a legal notice to Bollywood actress Madhuri Dixit who endorses Maggi noodules. HFDA is asking Madhuri to explain on what basis she tells Maggi as healthy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X