For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியலைன்னா.. என்ஜாய் பண்ணலாமே - சிபிஐ இயக்குநர் பேச்சால் சர்ச்சை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: கிரிக்கெட் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒப்பீட்டு உவமையாக பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை எனில் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம் என சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக பேசியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா, நமது நாட்டின் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. விடுமுறைக்கால ஓய்வு விடுதிகளில் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

Legalising betting like 'enjoying rape': CBI chief Ranjit Sinha's words spark outrage

கருப்புப் பணம் வைத்திருக்கும் நபர்கள் தாங்களாகவே முன்வந்து விபரங்களை தெரிவித்தால் சலுகை அளிக்கப்படும் என அரசே அறிவிப்பு செய்கிறது.

அப்படி இருக்கும் நிலையில், கிரிக்கெட் பெட்டிங்கை சட்டபூர்வமாக்குவதில் தவறு என்ன? அதாவது பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை எனில் அதை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாமே என்று கூறினார்.

ரஞ்சின் சின்காவின் இப்பேச்சு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய மகளிர் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பல்வேறு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாரதிய ஜனதாவின் நிர்மலா சீதாராமன், சின்காவுடன் பணியாற்றும் பெண்கள், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் அவரது கருத்தை ஏற்றுக் கொள்வார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத், நாட்டின் முதலாவது பெண் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி உள்ளிட்டோரும் ரஞ்சித் சின்காவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து சிபிஐ வெளியிட்ட விளக்க அறிக்கையில், ரஞ்சித் சின்காவின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CBI Director Ranjit Sinha has landed himself in a massive controversy by comparing the legalizing of betting in sports to 'enjoying rape'. India's top investigator was at a panel discussion in Delhi on Tuesday evening, trying to argue that betting should be legalised, when he drew the bizarre analogy, "If you can't prevent rape, enjoy it." Mr Sinha used the comment to illustrate that it was difficult and pointless to enforce a ban on betting
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X