• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதல்ல யானை.. பிறகு பசு மாடு.. இப்ப சிறுத்தை.. என்னாச்சு மனிதர்களுக்கு.. கொடூரத்திற்கு அளவே இல்லையா!

|

டேராடூன்:அடப்பாவிகளா.. கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லையா என்று கேட்கும்படியான ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஒரு சிறுத்தையை மிக கொடூரமாக கொன்று, அதன் நகங்கள், பற்கள், தோல்கள் என அனைத்தையும் வெறித்தனத்துடன் பிடுங்கி உள்ளனர் ஊர்மக்கள்.. மேலும் இறந்த சிறுத்தையை தோளில் போட்டுக் கொண்டு ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடியும் உள்ளனர்.. இந்த சம்பவம் ஜீவகாருண்யம் நிறைந்த இந்தியாவில்தான் நடந்துள்ளது.

இந்தியாவில் விலங்குகளுக்கு இப்போது பாதுகாப்பு குறைந்து விட்டது. சுதந்திரமாக காட்டுக்குள் சுற்றித் திரிந்தாலும் இந்த மனிதர்கள் சும்மா விடுவதில்லை. ஊருக்குள் வந்தாலும் உருத் தெரியாமல் செய்து விடுகின்றனர்.

சமீபத்தில் இப்படித்தான் கேரளாவில் ஒரு பெண் யானையை ஈவு இரக்கமே இல்லாமல் படு பாதகர்கள் அன்னாசிப்பழத்தில் வெடி வைத்து கொன்று குருதி குடித்தனர். அந்த யானையின் மரணம் ஒவ்வொரு இதயத்தையும் பிசைந்து போட்டு விட்டது. இன்னும் கூட மனசு ஆறவில்லை. அப்படி ஒரு பச்சைப் படுகொலை அது.

முருகனுக்கு டீ வாங்க போன மனைவி.. அந்நேரம் பார்த்து வெட்டி தள்ளிய கும்பல்.. அதிர்ந்த மதுரை ஜிஎச்முருகனுக்கு டீ வாங்க போன மனைவி.. அந்நேரம் பார்த்து வெட்டி தள்ளிய கும்பல்.. அதிர்ந்த மதுரை ஜிஎச்

 ஆற்றாமை

ஆற்றாமை

ஆற்றுக்குள் நின்று தனது ஆற்றாமையை போக்க அந்த யானை தவித்த விதம் மனசெல்லாம் நொறுங்கச் செய்து விட்டது. தனக்கு இத்தனை கொடுமை செய்த மனிதர்களை அது துளி கூட பாதிப்பை கொடுக்காமல் போய்ச் சேர்ந்தது பாருங்கள்.. அங்குதான் மனிதம் சுக்கு நூறாக சின்னாபின்னமானது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பசு மாட்டின் வாயில் வெடி வைத்து ஒரு கொடூரன் செய்த செயல் அதிர வைத்தது.

கொடூரம்

கொடூரம்

இந்த சோகம் போதாது என்று குவஹாத்தியில் ஒரு கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த ஊரின் பேரு என்னன்னா காதப்ரி. அங்கு அடிக்கடி காட்டு விலங்குகள் புகுவது வழக்கமாம். இதனால் வலை விரித்து அதைப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். சோய்லாம் போடோ என்பவர் ஒரு வலையை விரித்து வைத்திருந்தார்.

 வனத்துறை

வனத்துறை

ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு ஒரு சிறுத்தை புகுந்து விட்டது. அது அங்கு விரித்து வைக்கப்பட்டிருந்த வலையில் சிக்கி விட்டது. அவ்வளவுதான் ஊருக்குள் பெரும் கொண்டாட்டமாகி விட்டது. சிறுத்தை சிக்கிருச்சு என்று அத்தனை பேரும் திரண்டுள்ளனர். வனத்துறையினருக்கும் தகவல் போனது. வனத்துறையினர் வந்து கொண்டிருந்தனர்.

சிறுவன்

இந்த நிலையில் மக்கள் கூட்டத்தைப் பார்த்து மிரண்ட சிறுத்தை வலையிலிருந்து வெளியேறி தப்ப முயன்றது. அது வெளியே வந்த வேகத்தில் 7 வயது சிறுவனை கடித்துப் பிராண்டி விட்டது. இதைப் பார்த்து கோபமடைந்த மக்கள் கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து சிறுத்தையை தாக்க ஆரம்பித்தனர். மனிதர்கள் நடத்திய இந்த கொலை வெறித் தாக்குதலில் சிறுத்தை பரிதாபமாக செத்துப் போனது.

 கோர கொலை

கோர கொலை

கொன்றதோடு நிற்கவில்லை இந்த மக்கள். சிறுத்தையின் கண்கள், நகங்களை தனித் தனியாக பிய்த்து எடுத்து விட்டனர். மிகக் கோரமான முடிவை அந்த சிறுத்தை சந்தித்தது. மக்கள் அமைதியாக இருந்திருந்தால் சிறுத்தையும் வலைக்குள் பேசாமல் இருந்திருக்கும். ஆனால் அவர்கள் கூட்டமாக கூடி சத்தம் போட்டு பீதி ஏற்படுத்தியதால்தான் சிறுத்தை வெளியேற முயன்றது. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது 6 பேரை போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மனிதர்களே.. கொஞ்சமாவது மனிதர்களாக நடந்து கொள்ளுங்கப்பா.. பாவம் விலங்குகள்.

English summary
leopard killed by villagers of and police filed case over in assam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X