For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ!

இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுக்க திருநங்கைகளும், திருநம்பிகளும், ஓரினசேர்க்கையாளர்களும் சேர்ந்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நீக்கப்பட்ட 377 சட்ட பிரிவு.. நாடு முழுக்க கொண்டாட்டம்.. உற்சாக வீடியோ!

    டெல்லி: இந்திய தண்டனை சட்ட பிரிவு 377 நீக்கப்பட்டதை அடுத்து நாடு முழுக்க திருநங்கைகளும், திருநம்பிகளும், ஓரினசேர்க்கையாளர்களும் சேர்ந்து இந்த தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு பாலியல் சிறுபான்மையினருக்கு எதிரான இந்திய தண்டனை சட்ட பிரிவு 377ஐ நீக்கி உள்ளது. இன்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    இந்த வழக்கை இந்திய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.இதில் ஐந்து நீதிபதிகளும் ஒரு மனதாக தீர்ப்பு வழங்கினார்கள்.

    மேலும் சர்ச்சைக்கு உரிய 377 சட்ட பிரிவை நீக்கினார்கள். இதனால் இந்தியாவில் சட்டப்பூர்வமாக்கப்பட்டது ஓரினச்சேர்க்கை.

    டெல்லியில் கொண்டாட்டம்

    இந்த நிலையில் டெல்லி லலித் ஹோட்டலில் இந்த தீர்ப்பை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதை அங்கு ஊழியர்கள் நடனமாடி கொண்டாடினார்கள்.

    பெரிய கொண்டாட்டம்

    ஓரின சேர்க்கையாளர்கள் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் இயக்குனர் மாலினி ஜீவரத்தினமும் அவரது நண்பர்களும் இந்த தீர்ப்பை கொண்டாடினார்கள். இதே போல் இந்தியா முழுக்க கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.

    போராட்ட அட்டைகள்

    இவர்கள் பல வருடமாக தங்கள் உரிமைக்கு போராடினார்கள். இனி இதுபோன்ற போராட்ட அட்டைகள் எல்லாம் அவர்களுக்கு தேவைப்படாது.

    உற்சாக கொண்டாட்டம்

    கொல்கத்தா உள்ளிட்ட நாடு முழுக்க திருநங்கைகளும், திருநம்பிகளும், ஓரினசேர்க்கையாளர்களும் சேர்ந்து இந்த தீர்ப்பை இப்படித்தான் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

    English summary
    LGBT people celebrating the verdict of SC in Section 377 case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X