For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்தைக்கு வாய்த்தது... அண்ணன் மகனுக்கு கிடைக்காமல் போயிருச்சே.. 30 வருட சோகக் கதை!

Google Oneindia Tamil News

போபால்: கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு அப்பாவுக்கு ஏற்பட்ட அதே நிலை இன்று மகனுக்கும் ஏற்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்து கதைதான் இது.

30 வருடங்களுக்கு முன்பு முதல்வர் பதவி கிடைக்காமல் ஏமாந்தார் மாதவராவ் சிந்தியா. இன்று அவரது மகன் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கும் அதேபோன்ற ஏமாற்றம் கிடைத்துள்ளது.

பாஜகவில் இருக்கும் சிந்தியா குடும்பத்தைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவி வகித்து ஓய்ந்து விட்டார். ஆனால் காங்கிரஸில் இருக்கும் சிந்தியா குடும்பத்திற்கு இதுவரை முதல்வர் பதவி கை கூடாமல் இழுத்துக் கொண்டிருப்பது சுவாரஸ்யமானது.

மன்னர் குடும்ப வாரிசு

மன்னர் குடும்ப வாரிசு

மராத்தா மன்னர் பரம்பரையைச் சேர்ந்தது சிந்தியா குடும்பம். மத்தியப் பிரதேசத்தில் குவாலியரை ஆண்ட பரம்பரை இது. இதன் கடைசி வாரிசுதான் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. இவரது அத்தைதான் வசுந்தரா ராஜே சிந்தியா.

முதல்வர் பதவி

முதல்வர் பதவி

நடந்து முடிந்த மத்தியப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் ம.பியில் பாஜக தனிப் பெரும் கட்சியாக வந்துள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதில் முதல்வர் பதவிக்காக கடுமையாக முயன்றார் ஜோதிர் ஆதித்யா சிந்தியா. ஆனால் அது கிட்டவில்லை. சீனியர் கமல்நாத்துக்கு அது போய் விட்டது.

30 வருட ஏமாற்றம்

30 வருட ஏமாற்றம்

ஆனால் சிந்தியா குடும்பத்துக்கு இது முதல் ஏமாற்றம் இல்லை. இதற்கு முன்பு கடந்த 1989ம் ஆண்டு இதேபோலத்தான் சிந்தியாவின் அப்பா மாதவராவ் சிந்தியாவும் ஏமாந்தார். அவர் ஏமாந்தது அர்ஜூன் சிங்கிடம். இப்போது மகன் ஏமாந்திருப்பது கமல்நாத்திடம்.

இது ராகுல்.. அது ராஜீ்வ்

இது ராகுல்.. அது ராஜீ்வ்

அப்போது பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. ம.பியில் லாட்டரி ஊழலில் சிக்கி அப்போதைய முதல்வர் அர்ஜூன் சிங் பதவி விலக நேரிட்டது. இதையடுத்து முதல்வராக முயன்றார் மாதவராவ் சிந்தியா. டெல்லியிலிருந்து ஓடி வந்தார். 2 நாள் தீவிரமாக ஆதரவைத் திரட்டினார்.

வில்லனாக மாறி அர்ஜூன் சிங்

வில்லனாக மாறி அர்ஜூன் சிங்

ஆனால் அர்ஜூன் சிங் விடவில்லை. தனது ஆதரவு எம்எல்ஏக்களை தனியாக திரட்டி சிந்தியாவின் முயற்சிகளுக்கு பெரும் இடையூறாக மாறினார். தனது ஆதரவாளருக்குப் பதவி பெற தீவிரமாக முயன்றார். பார்த்தால் ராகுல் காந்தி. இன்னொரு சீனியரான மோதிலால் வோராவை முதல்வராக்கி விட்டார்.

இன்று அதேபோல சீனியருடன் மோதி பதவியை தவற விட்டுள்ளார் ஜோதிர் ஆதித்யா சிந்தியா.

English summary
Son Jyotiraditya Scindia has lost the war to a veteran leader like his father late Madhav Rao Scindia 30 years back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X