For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை போலவே இழுத்தடிக்கப்பட்ட மாட்டுத்தீவன ஊழல்

இந்திய நீதிமன்ற வரலாற்றில் இழுத்தடிக்கப்பட்ட வழக்குகளின் பிதாமகனாக கருதப்படும் மாட்டுத்தீவன ஊழல் வழக்கின் தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

ராஞ்சி: பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்ட வழக்குகளில் முதன்மையானதாக கருதப்படும் மாட்டுத்தீவன வழக்கின் தீர்ப்பில் லாலு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். தண்டனை விவரம் வரும் ஜனவரி 3 அறிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அளவில் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு தான் மிகவும் நீண்ட நாள் நடைபெற்ற வழக்காக நமக்கு தெரியும். ஆனால் இந்திய அளவில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தாத்தாவாக கருதப்படுவது லாலுவின் மாட்டுத்தீவன வழக்காகும்.

1990களில் சுமார் 960 கோடி ரூபாய்க்கு ஊழல் செய்து அப்போதே உலகளவில் பேசப்பட்டார் லாலு.

 சும்மா வாய்தாக்கள்

சும்மா வாய்தாக்கள்

பல ஆயிரம் மாடுகள் போதிய தீவனம் இல்லாமல் இறந்தபோது தான் இந்த விவகாரம் வெளி உலகிற்கு தெரியவந்தது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு போல சிறிய சிறிய காரணங்களுக்காக பலமுறை வாய்தா வாங்கப்பட்டு பல ஆண்டுகள் தீர்ப்பு அளிக்கப்படாமலே வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 சிறை தண்டனை

சிறை தண்டனை

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பின் படி ஜெயலலிதா சிறைத்தண்டனை அனுபவித்தாரோ அதைப்போலவே லாலுவும் 2013ம் ஆண்டு சிறை தண்டனை அனுபவித்தார். இதன்தொடர்ச்சியாக ஜாமீனில் வெளி வந்த லாலு எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீவிர அரசியலிலும் ஈடுபட்டார்.

 ஜெயலலிதா போலவே

ஜெயலலிதா போலவே

வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் முறையான ஆதாரங்களும், ஆவணங்களும் இல்லை என்றும், பலமுறை வாதம் புரியவில்லை என்று ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கூறப்பட்டதை போல லாலுவும் விசாரணையை தட்டிக்கழித்து வந்தார். இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் லாலுவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 இழுத்த வழக்கு

இழுத்த வழக்கு

21 ஆண்டுகள், எத்தனை நீதிமன்றங்கள், எத்தனை வாதங்கள், பல ஆயிரம் கோடி இழப்பு என்று இழுத்துக்கொண்டு வந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. நியாயம் வென்றதா என்று தெரியவில்லை ஆனால் மதிப்புமிக்க பல ஆண்டுகள் கடந்துள்ளன.

English summary
One of the long lasting case of Indian judiciary came to an end by a tragic end to lallu. Like Jayalalitha disproportionate asset case, bihar Ex CM Lalu s fodder scam case also been registered in the Indian Judiciaries History for its long lasting hearings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X