For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புலி பசித்தாலும் புல்லை தின்னாது.. இது பழமொழி.. ஆனால் சிங்கம்.. வைரல் வீடியோவை பாருங்க!

Google Oneindia Tamil News

Recommended Video

    கிர் காட்டில் புல்லை தின்னும் சிங்கம்- வைரல் வீடியோ

    காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கிர் காட்டில் உள்ள சிங்கம் ஒன்று புல்லை உண்ணும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது. அத்துடன் இது குறித்து சமூக வலைதளங்களில் விவாதமே நடந்து வருகிறது.

    புலி, சிங்கம் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஆடு, மாடு, முதல் மனிதன் வரை அனைத்தையும் உணவாக உட்கொள்ளும். இதில் புலியோ எப்போது உணவு கிடைத்தாலும் அப்போது அடித்து தின்னும்.

    ஆனால் சிங்கமோ பசிக்கும்போது மட்டுமே உணவு உண்ணும். புலி பசித்தாலும் புல்லை தின்னாது என்பது பழமொழி. ஆனால் இங்கு ஒரு சிங்கமே புல்லை தின்னும் வீடியோ வைரலாகியுள்ளது.

    என்னாது அனிதாவுக்கு கல்யாணமாய்ருச்சா.. மன்னிச்சூ நண்பர்களே!என்னாது அனிதாவுக்கு கல்யாணமாய்ருச்சா.. மன்னிச்சூ நண்பர்களே!

    புட்களை உண்ணும் காட்சிகள்

    புட்களை உண்ணும் காட்சிகள்

    குஜராத் மாநிலம் கிர் காட்டில்தான் இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கிர் காட்டில் ஒரு சிங்கம் அங்குள்ள புல்களில் உள்ள மூலிகைச் செடிகள், புதர்களில் உள்ள புட்களை உண்ணும் காட்சிகள் வைரலாகியுள்ளது.

    பெண் சிங்கம்

    பெண் சிங்கம்

    இந்த காட்சிகள் தற்போது விவாதப்பொருளாகியுள்ளன. ஒரு சிலர் இந்த சிங்கம் வெஜிடேரியன் என்றும் இன்னும் சிலரோ அந்த சிங்கத்தை டயட்டில் இருக்குமாறு அவரது மனைவி (பெண் சிங்கம்) அறிவுறுத்தியிருப்பார் என்றும் கூறுகின்றனர்.

    சுத்தம்

    சுத்தம்

    மேலும் தனது குடல்களை சுத்தம் செய்ய முதலில் புற்களை தின்றுவிட்டு பின்னர் வாந்தி எடுத்தால் குடல் சுத்தம் ஆகிவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். புற்களில் நார் சத்து அதிகமாக உள்ளது என்றும் வாதங்கள் வருகின்றன.

    சிங்கம்

    சிங்கம்

    இதுகுறித்து வன விலங்கு உயிரின நிபுணர்கள் கூறுகையில் சமூக வலைதளங்களில் உலா வரும் விவாதங்களில் ஒரு சில கருத்துகள் உண்மைதான். பச்சையாக கறியை சிங்கம் உட்கொள்ளும் போது அதிலிருந்து சுரக்கும் ஆசிட், ஜீரணத்தில் கோளாறை ஏற்படுத்தும். எனவே இதற்கு புற்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் சிங்கம் புல்லை தின்றிருக்கும் என்கின்றனர்.

    English summary
    Lion in Gir forest caught in camera eating grass. This is strange for some of the people except wildlife enthusiasts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X