For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் பரிமாற்றம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியல் ஒரே நேரத்தில் டெல்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்கள் மூலம் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

கடந்த 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி முதல் இந்தியா-பாகிஸ்தான் இடையே இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அணுசக்தி நிலையங்களை தாக்கிக்கொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்து கொண்டன. எனினும், இந்த ஒப்பந்தம் 1992-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளும் ஆண்டின் முதல் நாளில் தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களை பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்படி அணுசக்தி நிலையங்கள் குறித்த தகவல்கள் பரிமாறப்படுகின்றன.

List of nuclear exchange between India and Pakistan

அந்த வகையில், 25-வது ஆண்டாக இந்த ஒப்பந்தத்தின்படி தங்கள் நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்களின் பட்டியலை இருநாடுகளும் நேற்று பரிமாறிக்கொண்டன. ஒரே நேரத்தில் டெல்லியிலும், இஸ்லாமாபாத்திலும் உள்ள தூதரகங்கள் மூலம் இந்த பட்டியல் பரிமாறிக்கொள்ளப்பட்டது.

இதேபோல் கைதிகள் பட்டியலையும் இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டன. இதன்படி பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகள் பற்றிய தகவல் இந்தியாவிற்கும், இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகள் பற்றிய விபரம் அந்நாட்டிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

English summary
India and Pakistan have exchanged the list of their nuclear installations and facilities under the Agreement on the Prohibition of Attack against Nuclear installations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X