For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

BREAKING NEWS: கள்ளக்காதல் குற்றமில்லை.. 497வது பிரிவு ரத்து.. சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

சர்ச்சைக்குரிய இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: சர்ச்சைக்குரிய இந்திய தண்டனை சட்டமான சட்ட பிரிவு 497ஐ நீக்ககோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அளித்து வருகிறது. பெண்ணின் கணவர் என்பவர் அவருக்கு எஜமானர் அல்ல. திருமண பந்தத்திற்கு அப்பாலான தகாத உறவு குற்றமில்லை. அது தற்கொலைக்குத் தூண்டப்படாத வரை என்று தீர்ப்பை வாசிக்கும் தலைை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்தியத் தண்டனைச் சட்டம் 497 என்பது ஒரு பெண் தனது கணவரின் அனுமதி அல்லாமல் வேறு ஒரு ஆணுடன் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. ஆனால் இதில் அந்த பெண் தண்டிக்கப்பட மாட்டார். ஆண் மட்டுமே தண்டிக்கப்படுவார்.

Recommended Video

    கள்ளக்காதல் கிரிமினல் குற்றமில்லை.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு- வீடியோ
    LIVE UPDATES - Adultery Law: SC verdict on Section 497

    இந்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்டும். இந்த சட்டத்திற்குள் பெண்களும் கொண்டுவரப்படுவார்களா, இல்லை சட்டம் மொத்தமாக நீக்கப்படுமா, என்று இன்று தீர்ப்பு அளிக்கப்படும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.

    Newest First Oldest First
    11:17 AM, 27 Sep

    கள்ள தொடர்பு குற்றமில்லை - உச்ச நீதிமன்றம்

    இந்திய தண்டனை சட்ட பிரிவு 497 நீக்கப்பட்டது

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வில் தீர்ப்பு

    அமர்வில் இருந்த 5 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பு

    11:07 AM, 27 Sep

    தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது - தலைமை நீதிபதி

    பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு - தலைமை நீதிபதி

    11:03 AM, 27 Sep

    தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை - தலைமை நீதிபதி
    11:03 AM, 27 Sep

    கள்ளக்காதல் தவறு கிடையாது - தலைமை நீதிபதி

    திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை - தலைமை நீதிபதி

    இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது - தலைமை நீதிபதி

    11:01 AM, 27 Sep

    பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும் - தலைமை நீதிபதி

    சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான் - தலைமை நீதிபதி

    பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது - தலைமை நீதிபதி

    சமுதாயம் நினைப்பதைதான் பெண்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது - தலைமை நீதிபதி

    10:56 AM, 27 Sep

    திருமணத்திற்கு மீறிய பாலியல் உறவு குற்றம் கிடையாது - தலைமை நீதிபதி
    10:51 AM, 27 Sep

    ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும் - தலைமை நீதிபதி

    பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட கூடாது - தலைமை நீதிபதி

    திருமணத்தை மீறிய பாலியல் உறவில் ஆண், பெண்ணுக்கு தண்டனை வழங்க கோரும் வழக்கில் கருத்து

    10:50 AM, 27 Sep

    சட்டப்பிரிவு 497-ஐ நீக்க கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீர்ப்பை வாசிக்கிறார்கள்

    பெண்ணின் எஜமானர் கணவர் அல்ல - தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா

    English summary
    Adultery Law: SC will give a verdict on Section 497.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X