For Daily Alerts
Just In
நாடாளுமன்றத்தில் மீண்டும் அத்வானிக்கு தனி அறை கிடைத்தது!!
டெல்லி: நாடாளுமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் தலைவர் என்ற முறையில் பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு நாடாளுமன்றத்தில் அறை எண் 4 ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக அவர் அந்த அறையைப் பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த அறையில் அத்வானியின் பெயர்ப் பலகை நீக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கும் அறையிலேயே ஓய்வெடுத்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் அத்வானிக்கு நடாளுமன்றத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயகாகூட்டணியின் தலைவர் அறைக்கு வெளியே உள்ள பெயர் பலகையில் அத்வானியின் பெயர் இடம் பெற்றிருந்தது.